பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருணனைத் திறன் 133 பெருமுக் கோணத் துள்ளே உரோசு, விரிமலர் நறுமணம் வீசி மிளிர்ந்தன; நீல உரோசும் ஒருபுறம் நிறைந்தன; சிவப்பு உரோசும் ஒருபுறம் திகழ்ந்தன; வெள்ளை உரோசும் வியப்பைச் செய்தன; பன்னிறச் சாமந்தி பரப்பையும் இன்னும் இருந்த அழகின் சிரிப்பையும் எழுதி முடிக்க இருபதாண்டு கழியும்; ஆதலால் அடுத்தது கழறுவேன். உதகைப் பயணத்தை முடித்துக்கொண்டு குன்றுார் திரும்புகின்றார். பயணியர் தங்கும் வளைவில் தங்குகின்றார். பக்கத்தில் ஒரு பொய்கை. வளைவின் திண்ணையில் அமர்ந்து கொண்டு காட்சிகளை அநுபவிக்கின்றார். “அடுத்தது கழறுவேன்” என்று கூறிய கவிஞர் மேல் தொடர்கின்றார்:

மேல்வந்து மின்னி உட்சென்று குமிழ்விடும் சேல்விளை யாடும் பொய்கையும் திண்ணையும் கலைஞன் படமும் காண்பார்க் கிடமாம் திண்ணையி னின்று பொய்கையிற் செலுத்திய கண்களைத் தாமரைக் கண்டு மலர்ந்தன; அண்டையில் அல்லிகள் தன்முகம் கூம்பின.

பொய்கையைச் சுற்றும் புதரெலாம் பூக்கள், பூக்களில் வடியும் தேனெலாம் ஈக்கள் ஈக்களில் எழுவன இனிய பாக்களாம்!

திண்ணைக்குப் பந்தல் ஒன்று செய்த வண்ணமலர் குலுங்கு கொடிகளின் பின்னலில் வீழ்ந்த வெயிலால் கீழிடம் இன்ப ஓவியக் கம்பள விரிப்பைப் பெற்றது. விழிகள் அழகை உண்ணச், செவிகள் எழுமின் னிசையினை உண்ண, மூக்கு நறுமணம் உண்ண, நல்லுடல் குளிரை உண்ணக் கிடந்த என்னை, “உடனே உண்ண வருக” என்றான் ஒருமகன், இன்னும் என்ன உண்ட தென்றேன்.