பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல் - 1

பாட்டுத்திறன்

பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும்: என்று கனவு கண்டவர் பாரதியார்; கணிசமான அளவுக்கு பாடல்களால் இவ்வையத்தைப் பாலித்திடவும் செய்தார்.

கனக்கும் செல்வம் நூறுவயது; இவையும் தரநீ கடவாயே’ என வேண்டின. இக்கவிஞர் பெருமானுக்கு விநாயகப் பெருமான் இரண்டையும் வழங்கவில்லை. அற்பாயுளில் பரமபதித்தார்; வறுமைத் துன்பத்தின் கொடுமுடியையும் கண்டார்.

அவருடைய அருமைச் சீடர் பாவேந்தர் தம் குருநாதரின்,

சுவை புதிது, பொருள் புதித்து, வளம் புதிது, சொற்புதித்து சோதிமிக்க நவகவிதை’ என்ற கருத்திற்கு ஏற்றவாறு கவிதைச் செல்வத்தைப் பல்லாற்றானும் பெருக்கிப் பாமர மக்களையும், பாட்டாளி மக்களையும் ஈடுபடும்படிச் செய்தார். கணிசமான அளவு சீடர் செல்வத்தைப் பெறாது போயினும் தமிழர்தம் தவப்பயனாக 72 அகவை வாழ்ந்து கவிதைச் செல்வத்தைப் பெருக்கித் தமிழ்க் கவிதை வானில் ஒருதுருவமீனாகத் திகழ்கின்றார். இவர்தம் கவிதைகளில் ஈடுபட்ட புலவர் உலகம் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற பரம்பரையை உண்டாக்கி மகிழ்கின்றது.

பண்டையோர் முதல் இன்றிருப்போர்வரை பாடிய கவிதைகளின் திறனை - பாட்டுத் திறனைக் - கூறப்புகுவது தேனின் இனிமையைப் பற்றி உரைப்பதோடொக்கும். தேன் உண்டு நுகர வேண்டிய பொருள்; அங்ஙனமே பாட்டும் படித்து நுகர வேண்டியதொன்று,

1. பா.க : தோ.பா. காணிநிலம் - 3 2. பா.க: தோ.பா. விநம 7 3. பா.க: தோ. பா. வேங்கடபூபதி - 2 (3)