பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்களில் படிமங்கள் 161 வள்ளச்செந் தாமரைப்பூ

இதழ்கவிழ்த் திருந்த வாய்ப்பின் அருள்.இரண் டும்,சிவப்பு

மாதுளை சிதறச் சிந்தும் ஒள்ளிய மணிச்சி ரிப்பும்

உவப்பூட்டும் பெண்கு ழந்தை” என்னும் பகுதியில் வேடப்பனின் செல்வக் களஞ்சியம் காட்டப் பெறுகின்றது. குழந்தையின் எள்ளுப்பூப்போன்ற மூக்கின் கட்புல வடிவப் படிமத்திலும், தாமரை இதழ் போன்ற சிவந்த உதடுகளின் கட்புல வண்ணப் படிமத்திலும் உள்ளம் பறிபோகின்றது.

மாலைநேரக் காட்சியை,

மேற்றிசையில் வானத்தில் பொன்னு ருக்கு வெள்ளத்தில் செம்பரிதி மிதக்கும் தேரம்” என்னும் அடிகளில் கட்புலப் படிமமாகக் கண்டு மகிழலாம். வயலில் பகல் நேரத்தில் இலக்கியக் காட்சியை,

கடல்மிசை உதித்த பரிதியின் நெடுங்கதிர் வானெலாம் பாய்ந்தது! பறந்தது வல்லிருள் புவியின் சித்திரம் ஒளியிற் பொலிந்தது! இயற்கை தந்த எழிலிடை நடந்தேன்” என்னும் அடிகளில் கட்புல வண்ணப் படிமங்களை அநுபவித்து மகிழலாம்.

இன்னும்,

கதிர் முளைப்பது கிழக்கு - அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர் இமயம் வடக்கு - அதன் எதிர் குமரி தெற்கு” என்ற பாடலில் கதிர், இமயம், குமரி என்ற வண்ண வடிவப் படிவங்களைக் கண்டு நுகரலாம். 11. குடும்ப விளக்கு - ஒருநாள் நிகழ்ச்சி- பக்கம் 153 12. பாதா. கவிதைகள் முதல் தொகுதி-33 எழுச்சியுற்ற பெண்கள் - பக்கம் 112 13. பாதா. கவிதைகள் முதல் தொகுதி 56. வியர்வைக் கடல்- பக்கம் 153 14. இளைஞர் இலக்கியம் - 20 திசை - பக்கம் 59