பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 * பாவேந்தரின் பாட்டுத்திறன்

பாட்டதுபவத்தைச் சொற்களால் வரையறைப்படுத்தி அளந்து காட்ட இயல்:து.

பாவின் நயமெல்லாம் யானும்

பகர வல்லேனோ? ஆவின் பாற்கவையை - நாழி அனத்து காட்டிடுமோ?”

என்ற கவிமணியின் வாக்கு இவ்விடத்தில் சிந்தித்தற்குரியது.

கவிதை இன்னது என்று ஒரளவு அறிந்து கொண்டு அதனைச் கவைப்பது ஒருவகை அதனை அறியாமலேயே சுவைப்பது மற்றொரு வகை பெறும் அநுபவம் ஒன்றேயாயினும் அவ்வநுபவத்தின் தரத்தில் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். பூஸ்டு” என்ற ஒருவகைப் பானத்தைப் பருகினால் அஃது எல்லோருக்கும் இன்பத்தைத் தான் தரும், என்றாலும் அப்பானத்தில் இன்னின்ன சத்துப் பொருள்கள் சேர்ந்துள்ளன என்றும், அச்சத்துப் பொருள்களின் தன்மைகள் இன்னின்னவை என்றும் புரிந்து கொண்டு அதனைத் துய்த்தற்கும், ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் பூஸ்டைப்” பருகித் துய்த்தற்கும் வேறுபாடு உண்டு; அங்ஙனமே ஒரு தானியங்கியை அதன் பொறிநுட்பம் முதலியவற்றை நன்கு அறிந்து கொண்டு கடவுவதற்கும் அவற்றை அறியாமல் கடவுவதற்கும் வேறுபாடு இல்லாமல் இல்லை. எல்லாவித அறிவியல் உண்மைகளையும் அறிந்து ஆண்டவன் படைப்புத் திறனை உணர்வதற்கும், வெறும் கற்பனையிலேயே அதனை உணர்வதற்கும் வேறுபாடு உண்டு.இக்காரணத்தால்தான்பாவேந்தரின் கவிதைபற்றிய செய்திகளும், அதனுடன் தொடர்பு கொண்டுள்ள உணர்ச்சியற்றிய செய்திகளும் இந்நூலில் ஆராயப் பெறுகின்றன.

உணர்ச்சியின் தத்துவம்: கவிதையின் உயிர் போன்ற பகுதி அதில் பொதிந்துள்ள உணர்ச்சி, உணர்ச்சியில்லாத கவிதை வெற்றெனத் தொடுக்கப்பெற்ற ஒருவகைச் சொற்கோவையே.நம்மிடம் தோன்றும் உணர்ச்சிப் பெருக்கை நாம் ஆராய்ந்து பிரித்துப் பார்க்க முனைந்தால் அஃது இயலாத செயலாக முடியும். கடலலைகளையாவது