பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பாவேந்தரின் பாட்டுத்திறன்

தண்ணிலவும் அவள்முகமோ தாரகைகள் நகையோ? தளிருடலைத் தொடும்.உணர்வோ? நன்மணஞ்சேர்

குளிரும் விண்ணிலம் கார்குழலோ காணும்.எழிலெல்லாம்

மெல்லியின்வாய்க் கள்வெறியோ அல்லிமலர்த்

தேனின் வண்டின்ஒலி அன்னவளின் தண்டமிழ்த்தாய் மொழியோ வாழியஇங்கிவையெல்லாம் எழுதவரும் கவிதை! கண்டெடுத்தேன் உயிர்ப்புதையல் அதோவந்து விட்டாள்

கண்டெழுத முடியாத நறுங்கவிதை அவளே!” இதில் “கட்புலப் படிமம், தொடுபுலப் படிமம், நாற்றப்புலப் படிமம், சுவைப்புலப் படிமம், செவிப்புலப் படிமம்’ ஆகிய ஐந்து வகைப் படிவங்களும் கலந்த நிலையை அநுபவித்து மகிழலாம்.

மின்வெட்டுப் போன்ற மணிமொழிப் படிமங்கள்: மேற்கண்ட படிமங்களைத்தவிர பல்வேறு இடங்களில் கவிஞரின் சொற்களிலும் சொற்றொடர்களிலும் மின்வெட்டுகள் போன்ற பல்வேறு படிமங்கள் பாங்குறஅமைந்திருப்பதையும் கண்டு மகிழலாம். அவற்றுள் சிலவற்றை ஈண்டுக் காட்டுவேன்! செப்புச் சிலைபோல் நிற்றல் (குப்பன்), வாடாத பூ முடித்த வஞ்சி (வள்ளி, நெஞ்சம் மூலிகைமேல் மொய்த்திருத்தல், (மூலிகையில் ஆசை மோதிடுதல்), அச்சுப் பதுமை (வள்ளி) கிட்டரிய காதற் கிழத்தி இடும் வேலை விட்டெறிந்த கல்லைப்போல் மேலேறிப் போதல், தேன் சுரக்கப் பேசுதல், சாக்குருவி வேதாந்தம், கனிமுத்தம், கடுகளவும் ஆடாமல் கண்ணாடிப் பாத்திரத்தைக் கல்தரையில் வைப்பதுபோல், ஆளிவாய்ப் பாகவதன், வெல்லத் தமிழ்நாடு, தென்றலில் மெல்லச் சிலிர்க்கும் (சிரிக்கும்) முல்லை, கன்னல் தமிழ், வானத்தை வெண்ணிலா வந்து தழுவுதல், பாளைச் சிரிப்பு, ஆணிப்பொன் மேனி, அன்னத்தை (அமுதவல்லி) ஆரத் தழுவுதல், அழகு வெளிச்சம், நவமணிக் களஞ்சியம், இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி, தணல் அள்ளும் பெருவெளி, அமுதப்பண், குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகள், கெண்டைவிழிகள் மூடாக்

47. பா.தா.க., முதல் தொகுதி-14 எழுதாக் கவிதை - பக்கம் 75