பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

பாட்டுத்திறன்-Y_3 ஒருவிதமாக எண்ணி முடிவு கட்டலாம் எனத் தோன்றும்; நம் உணர்ச்சிகளை ஒருநாளும் எல்லை கட்டி வரையறுத்துப் பேச முடியாது என்பது தெளிவாகப் புலனாகும். இந்த உணர்ச்சிகளைப்பற்றி மேனாட்டு உடலியலறிஞர்களும், உளவியலறிஞர்களும் ஆராய்ந்து அறிவியலடிப்படையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவற்றை என் பிறிதொரு நூலில் விவரமாக ஆராய்ந்துள்ளேன்.” அவை சுருக்கமாக ஈண்டுத் தரப்பெறுகின்றன.

உடலும், உள்ளமும் நன்னிலையில் உறவு கொண்டிருந்தால்தான் நல்லுணர்ச்சிகள் தோன்றி, கவிதையை அநுபவிப்பதற்குத் துணை செய்யும். உணர்ச்சிகளின் திரட்சியே மேலீடான மன உணர்ச்சிகள். இவையே, நம்மைக் கவிதைகளைப் படிக்கத் தூண்டுபவை. உணர்ச்சிகளே மீப்பண்புகளுக்குக் காரணமாக இருப்பவை.இவற்றின் காரணமாக நாம் பல்வேறு கவிதைகளைப் படிக்கின்றோம். இவற்றைப் படித்து அநுபவிப்பதற்கேற்ற மன நிலைகளையும் பெறுகின்றோம். இத்தகைய உணர்ச்சிகள் உள்ளக்கிளர்ச்சிகள் ஆகியவற்றை உடலியல், உளவியல்பற்றிய அடிப்படை அறிவின்றி எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது. இவை பற்றி மேனாட்டறிஞர்களின் பல்வேறு கொள்கைகள் எனது பிறிதொரு நூலில் விரிவாக விளக்கப் பெற்றுள்ளன.” பாட்டநுபவம் இன்னமுறையில்தான் நம்மிடம் ஏற்படுகின்றது என்பதைப்புரிந்து கொள்வதற்கு இவை ஒரளவுதுணை செய்யும். வாழ்க்கையில் நமக்கேற்படும் உணர்ச்சிகட்கும் கவிதைகளில் நாம் பெறும் உணர்ச்சிகட்கும் அங்கு வேறுபாடு காட்டப் பெற்றுள்ளது. நாம் கவிதையைப் படித்துத் துய்ப்பது தூண்டல்-துலங்கல் (Stimulus-response) தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. வெளியுலகிலுள்ள பொருள்கள் நம்புலன்களைத்துாண்டுவதால்தான் நாம் செய்திகளை அறிந்து கொள்ளுகின்றோம்; இதைத் தவிர நமக்குக் கருத்து நிலைச் (Ideational level) செயல்களாலும் தூண்டல்கள்

5. பாட்டுத்திறன் - இயல் (2-7) காண்க (ஸ்டார் பிரசுரம் 72, பெரிய தெரு,

திருவல்லிக்கேணி, சென்னை - 600 005) 6. பாட்டுத்திறன் - பகுதி - 1 காண்க.