பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 \ பாவேந்தரின் பாட்டுத்திறன்

தேர்கலி கொள்ள அமர்ந்து செழும்பரிதி ஆர்கலிமேற் காட்சி அளிக்கின்றான் கீழ்த்திசையில்: என்றும் காலைக் கதிரோன் எழுவதைக் காட்டுவார். கதிரவன் எழுந்தவுடன் அவன் வரவால் நிகழ்பனவற்றை,

எழுந்தன புட்கள், சிறகடித்துப் பண்ணே முழங்கின! ஏருழவர் முன்செல் எருதை அழிஞ்சிக்கோல் காட்டி அதட்டலும் கேட்டீர்’ என்று தெரிவிப்பார். (5) மாலைப் புனைவு கதிரவன் மறையும் நேரமாகிய அந்தி இவ்வாறு காட்டப் பெறுகின்றது.

புனலும் நிலவொளியும் - அங்குப் புதுமை செய்தே தெளிந்தோடும்! மரங்களில் இனிது பறத்துபறத் தங்கும் அங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்! தனிஒரு வெள்ளிக்கலம் - சிந்தும் தரனங்கள் போல்வன நிலவு நட்சத்திரம்! புனையிருள் அந்திப் பெண்ணாள் - ஒளி போர்த்த துண்டோஎழில் பூத்த துண்டோ?” என்று நிலவு ஒளியின் தோற்றத்தையும் பறவைகள் கூடுகளில் அடங்குதலையும் கூறுவார்.

முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி முன்னடியும் பெயர்க்காமல் இன்னும் இருக்கின்ற பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை” என்று கூறும்போது சங்கப் பாடல்கள் குறிப்பிடும் முல்லை நில உரிப்பொருள் தலைகாட்டும்.

25. பாதாக-தொகுதி 3-பக்கம் 172 28. பாதா.க. தொகுதி 3-பக்கம் 27. பாதா.க. தொகுதி- 1. பக்கம் 90-91 28. காதல் நினைவுகள்- பக்கம் 14