பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பாவேந்தரின் பாட்டுத்திறன் ஆற்றுப் படைகளை அணி செய்கின்றது. ஆற்று வெள்ளத்தின் அழகினை,

இருகரை ததும்பும் வெள்ள

தெனிவினில் எறியும் தங்கச் சரிவுகள் துரையோ முத்துத்

தடுக்குகள் சுழல்மீன் கொத்தி மரகத வீச்சு நீரில்

மிதக்கின்ற மரங்க ளின்மேல் ஒருநாரை வெண்டா ழம்பூ!

உவப்புக்கோ உவமை இல்லை.” என்ற கவிஞரின் சொல்லோவியம் விளக்குகின்றது. இன்னும் அவர்,

ஒரேவகை ஆடை பூண்ட

பெரும்படை, ஒழுங்காய் நின்று சரேலெனப் பகைமேல் பாயும்

தன்மைபோல் ஆற்று வெள்ளம், இரரவெல்லாம் நடத்தல் கண்டி இருகரை மரங்கள் தோல்வி வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி

மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி” என்று ஆற்று வெள்ளத்தையும் அதன் கண்கவர் காட்சி அழகினையும், கரையோர மரங்களின் கவினுறு கிளைகளையும் அழகுபட வருணிப்பார்.

ஆறு தந்த வளத்தால் நூற்றுக்கு நூறுபேர் நோய் தீர்ந்தனர்; அவர்கள் வறுமையும் தீர்ந்தது. கலப்பை தூக்கிய உழவர் பெருமக்கள் ஒய்வின்றி உழைத்து உழவுப்பண் பாடுகின்றனர்.

சேய்களின் மகிழ்ச்சி கண்டு

சிலம்படி குலுங்க ஆற்றுத் தாய்தடக்கின்றாள் வையம்

தழைகவே தழைக வென்றே.”

48. அழகின் சிரிப்பு - பக்கம் 20 49. அழகின் சிரிப்பு பக்கம் 20 50. அழகின் சிரிப்பு - பக்கம் 21