பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 பாவேந்தரின் பட்இத்தின்

செந்தாமரையைக் கண்டநுபவித்த கவிஞரின் மகிழ்ச்சிப் பெருக்கினை.

என்னைநான் இழந்தேன்; இன்ப

உலகத்தில் வாழலுற்றேன்;

இன்றெலாம் பார்த்திட்டாலும்,

தெவிட்டாத எழிலின் கூத்தே.” என்ற பாடல் அடிகள் இயற்கையின் எழில் கூத்தில் தம்மை மறந்த நிலையையும், அவர்தம் ஈடுபாட்டையும் காட்டுகின்றன.

3. பறவை இனங்கள் எழில் கொழிக்கும் இடங்களில் பறவைகள் பாங்குறக் கூடி மகிழும் என்பதற்கு வேடந்தாங்கல் சரணாலயம் வெள்ளிடை விலங்கலெனக் காட்டும் நிலையான சான்று. “அழகின் சிரிப்பில்” கவிஞர் இரண்டு பறவை இனங்களைக் காட்டி மகிழ்கின்றார்; நம்மையும் மகிழ்விக்கின்றார்.

(1) புறாக்கள்: பண்டைக் காலத்தில் கடிதங்கள் கொண்டு செல்வதற்குப் புறாக்கள் பயன்படுத்தப் பெற்றனவாக வரலாற்றுக் குறிப்பு வண்ணப் புறாக்கள் கண்ணுக்குப் பெருவிருந்து புறாக்களின் பண்ணிறத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம்

இருநிலா இணைந்து பாடி

இரையுண்ணும்! செவ்விதழ்கள் விரியாத தாமரைபோல்

ஒர்இணை:மெல்லியர்கள் கருங்கொண்டை! கட்டி ஈயம்

காயாம்பூக் கொத்து! மேலும் ஒருபக்கம் இருவாழைப்பூ!

உயிருள்ள அழகின் மேய்ச்சல்!” பாடலைப் படிக்கும்போதே அது படச்சுருள்போல் நமது மனத்திரையில் படத்தை விரித்துக் காட்டுகின்றது. 62. அழகின் சிரிப்பு- பக்கம் 25 63. அழகின் சிரிப்பு- பக்கம் 38