பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடுபொருள் Y 7

உள்ளத் துள்ளது கவிதை - இன்பம்

உருவெடுப்பது கவிதை; தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை

தெரிந்துரைப்பது கவிதை’ என்று கவிதை இன்னது என்றே வரையறையும் செய்து விடுவர். என் அரிய நண்பரும் திறனாய்வுக் கலையைத் தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்தவருமான பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் குண்டுசி முதல் குமரிமுனை வரை எல்லாப் பொருளும் கவிதைக்குரியவை என்று தமக்கே உரிய தனிப்பாணியில் ஆணித்தரமாக அறைவர்.” வைணவ சமயத்தினர் “உயிரற்ற பொருளும்” (அசேதனம்) வழிபாட்டிற்குரியவை என்னும் பாங்கில்,

சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே” திருவேங்கடமாமலை என்ற அசித்தைத் தொழுதாலே மலையை இடமாகக் கொண்ட திருமலையப்பனைத் தொழுதால் நம் வினைத்திரள்கள் யாவும் ஒழிதல்போல ஒய்ந்தொழியும் என்பார் நம்மாழ்வார்.

1. கடவுள் இது பாடுபொருளாகப் பாவேந்தர் கவிதைகளில் எவ்வாறு இடம் பெறுகின்றது என்பதை நோக்குவதற்கு முன் அடிப்படையாகச் சிலவற்றைக் கருதுவோம்.

மின்சுற்றில் நேர்முனை, எதிர்முனைகள் இயல்பாக இருப்பதைப் போல், இறை வழிபாட்டிலும் இறை மறுப்புக் கொள்கை உருவாகியது என்று கருதலாம்.

கடவுள் உண்டு கடவுள் இல்லை

என்ற இரண்டு வாக்கியங்களை நோக்குவோம். இந்த இரண்டிலும்

4. மலரும் மாலையும் - கவிதை - 7 5. இலக்கியக்கலை 6. திருவாய், 33 : 8