பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 பாவேந்தரின் பாட்டுத்திறன்

இயல் - 11

பாவேந்தர் நடையில் சங்கப் பாடல்கள்

இயற்கையாகக் கிடைக்கும் பால் குழந்தையின் செரிமானத்திற் கேற்ப மாவாக்கப் பெற்று, கையாள்வதற்கும் எளிதாக இருக்குமாறு புட்டிகளில் அடைக்கப்பெற்று எங்கும் கிடைக்குமாறு செய்யப்பெற்று விற்கப்பெறுவதை நாம் அறிவோம். அதுபோல சங்கப்பாடல்கட்கு நல்லவிளக்க உரைகள் எழுதி இக்கால மக்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கேற்ப வழங்கினவர்கள் உரையாசிரியர்களும் அவர்கள் வழிவந்த இக்காலப் புலவர்களுமாவர். ஆனால், சில சங்கப்பாடல்களைத் தம் பா நடையில் அமைத்து வழங்கியுள்ளார் பாவேந்தர். அந்தச் சங்கப் பாடல்களையும் அவற்றைத் தம் நடையிலமைத்த பாவேந்தரின் பாடல்களையும் இந்த இயலில் எடுத்துக்காட்டுவேன். இதனால் இவர்தம் முதல் முயற்சி நமக்குப் புலனாகின்றது.

வேந்தன் இட்ட பணியை மேற்கொண்டு அதனை நிறைவேற்றச்

செல்லும் தலைவன் தன் தேரோட்டியை நோக்கி, நண்பனே, இன்று விரைந்து ஏ.கி மன்னன் இட்ட கட்டளையை நிறைவேற்றி நாளையே நம் தலைவியின் இல்லத்தை அடைதல் வேண்டும்; விரைவாகத் தேரைக் கடவுவாய்’ என்று கூறுவதாக அமைந்த குறுந்தொகைப் (189) பாடல்:

இன்றே சென்று வருவது நாளைக்

குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக

இளம்பிறை யன்ன விளக்குசுடர் நேமி

விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்

காலியற் செலவின் மாலை யெய்திச்

சின்னிரை வால்வளைக் குறுமகள்

பன்மா னாக மணந்துவக் குவமே.