பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 v. பாவேந்தரின் பாட்டுத்திறன்

தலைவி தோழியிடம் தான் தலைவனை நினைந்து துயிலாதிருந்தலைக் கூறியது.

விளக்கம். ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து சென்ற தலைவன் தான் கார்காலம் வரும்பொழுது வந்து விடுவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது. தலைவன் வரவில்லை. தலைவி துயருறுவாள் என வருந்துகின்றாள் தோழி. அவளை நோக்கித் தலைவி, “தலைவனை நினைந்துகொண்டே இருந்ததனால் உறங்கவில்லை” என்று கூறுகின்றாள்.இக்கருத்து அடங்கிய பாவேந்தரின் இலகுவான பாடல்,

ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பருவத்தைக் கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின் சிரிப்பென அரும்பு விரிக்கும் நாடனை எண்ணித் துயில் நீங்கியளன் கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே! இது படித்தவுடன் விளங்குகின்றதன்றோ? இன்னும் கவிஞர் இலகுவாக அமைத்த குறுந்தொகைப் பாடல்கள் உள்ளன. அவை யாவும் அகவல் யாப்பிலேயே அமைக்கப் பெற்றவை.

பிறிதொரு பாடல்: இது குறுந்தொகையில் (129) கோப்பெருஞ்சோழன் அமைத்த தலைவன் கூற்றாக வருவது,

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப புலவர் தோழ கேளாயத்தை மாக்கடல் நடுவண் எண்னாள் பக்கத்துப் பகவெண் திங்கள் தோன்றி யாங்குக் கதுப்பயில் விளக்கும் சிறுநுதல் புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே. விளக்கம்: ஒரு நாள் தலைவன் தலைவியொடு அளவளாவி மீள்கின்றான். அவளையே நினைந்து வாடுகின்றான். அவனது முக வாட்டத்தைக் கண்ட அவனுடைய நண்பன் நினக்கு இந்த வாட்டம் உண்டானதற்குக் காரணம் என்ன ?” என்று வினவுகின்றான்.

2. பா.தா.க. தொகுதி - 2 பக்கம் 66