பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நடையில் சங்கப்பாடல்கள் Y 29

சங்கப்பாடலின் கருத்து உரையின் துணையின்றி எவரும் எளிதாக அறிந்து கொள்ளும் பாங்கில் அமைந்துள்ளது.

இன்னொரு பாடல்: இதுவும் பாலை பாடிய பெருங்கோ,

பாடியதுதான் (குறுந் 16). தலைவன் பொருள்வயிற் பிரிந்த விடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு தோழி ஆற்றுவிக்கும் பாங்கில் அமைந்தது.

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்

பொன்புனை பகழி செப்பங் கொண்மார்

உகிர்துதி புரட்டு மோசை போலச்

செங்காற் பல்லி தன்துனை பயிரும்

அங்காற் கள்ளியங் காடிறந்தோரே.

விளக்கம்: தலைவன் பொருள் தேடும் பொருட்டுத் தலைவியை விட்டுப் பிரிகின்றான். அப்போது தலைவி, “அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோ?” என்று கவலைப்பட்டு வருந்துகின்றாள். அப்போது பல்லியொன்று கொட்டுகின்றது. அப்பல்லி சொல்லுக்குப் பலன் சொல்லும் பாங்கில் தோழி, “அம்மா, அவர்சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைத்தலைக் கேட்பார். உடனே நின் நினைவு வரும். உடனே மீண்டு திரும்புவார். வருந்தற்க” என்று ஆறுதல் கூறி அவள் கவலையைப் போக்குவாள் அவளுடைய ஆருயிர்த் தோழி.

இந்தப் பாடலைப் பாவேந்தர் எவரும் எளிதில் புரிந்துகொள்ளும் எளியதோர் இசைப் பாடல் வடிவில் வார்த்துத் தருகின்றார்.

நினையாரோ தோழி?

தினையேனும் எனை நினையாரோ தோழி? (தி)

நினைவாராயின் எனையான வருவார்! நினைக்கிலா இனியேனும்என் நெஞ்சம்களிக்க தி) தீவேடன் அம்பின் இரும்புமுனை தீட்டும் ஒலிபோல் செங்காற் பல்லி துணையினை அழைப்பது கேட்டும்