பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் 235 ஒலித்த வண்ணம் உள்ளன.இங்ஙனம் பாவேந்தரின் பாடல்கள் பகரும் செய்திகளை (Messages) நிரல்படக் காண்போம்.

தந்தை பெரியார்: ஆழ்வார்கள் கண்ணனைப்பற்றியும் அவனுடைய பல்வேறு செயல்களைப் பற்றியும் அடிக்கடி சொல்லி மகிழ்ந்து அநுபவிப்பதைப்போல் பாவேந்தர் எல்லாவிதச் சந்தர்ப்பங்களிலும் பெரியாரின் பெருமைகளையும் அவர்தம் அரிய தொண்டுகளையும் சொல்லிச் சொல்லி மகிழ்கின்றார்; கேட்போரையும் மகிழ்வித்து அவர்தம் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்கின்றார். இஃது அவர் தரும் அரிய செய்திகளில் மிக முக்கியமானது. சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

துங்கமுறும் வழிதேடித் துயரென்றும்

மகிழ்ச்சியென்றும் எண்ணா மல்தம் அங்கத்தை ஆவியினை ஆம்பொருளைத்

தாம்பாரா தளிக்கும் நல்ல கங்கைதிகர் உள்ளத்தார் இராமசாமிப்

என்றும்,

சமயவெறி தணிகளன்றார் சாதிவெறி

தனிகஎன்றார் சகோதரர்போல் அமைகளன அறிவித்தார் பெண்களெல்லாம்

நல்லுரிமை அடைக என்றார் எமை,அகத்தும் புறத்தினிலும் திருத்துதற்கே

எம்பெருமான் சொன்ன தெல்லாம் இமயமலை இல்லைஎன்று சொன்னதுபோல்

எண்ணினோம் பின்தெனித்தோம்’ என்று புகழ்வார். பிறிதோர் இடத்தில்,

பெரியார் சொன்னார் பெரியார் ஆதலின் அரிய இவற்றை அவரை அல்லால் எவரால் இங்கே சொல்ல முடிந்தது?

2. நாள் மலர்கள் - பக்கம் 88 3. நாள் மலர்கள் - பக்கம் 89