பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகளும் செய்திகள் 247 பாரதியார் கூட “தாய்மொழிமூலம் பெறும் கல்வியை வற்புறுத்தினார்.” அவருடைய கொள்கையைத் தழுவியே பாவேந்தரும் தாய்மொழிமூலம் கல்வி பெறுவதை வற்புறுத்துகின்றார் என்பதற்குப் பாடல்கள் சான்று இல்லை.

கட்டாயத் தமிழ்க்கல்விக்

கழகம் யாண்டும் கவினுறவே தமிழ்நாட்டில்

நிறுவ வேண்டும்” தமிழ்க்கல்வி தமிழ்நாட்டில்

கட்டாயம் என்பதொரு சட்டம் செய்க.” என்று தமிழ் மொழியைக் கட்டாயமாக அனைவரும் கற்க வேண்டும் என்று வற்புறுத்துகின்றார்; சட்டம் செய்யவேண்டும் என்றும் செப்புகின்றார். தமிழ் நாட்டில் இருப்போர் தமிழ் படிக்க முடியாத நிலையும் ஏற்படலாம் என்று முன்கூட்டியே எதிர்பார்த்தார் போலும். மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் தொடக்கக் காலத்தில் கல்வித் திட்டத்தில் தமிழ் ஒரு பாடமாக இல்லையல்லவா? இந்தியைத் திணிப்பதற்கு இதனை ஒரு வழியாகக் கொண்டார்கள் வடக்கர்கள். இதே காரணத்திற்காகத்தான் ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக்கச் சட்டம் செய்யக் காலந்தாழ்த்துகின்றார்கள். என்றாவது ஒருநாள் ஆங்கிலம் சட்டத்தின் மூலம் தொடர்பு மொழியாகத்தான் போகிறது. இல்லாவிட்டால் நாடு துண்டுபடும் வாய்ப்புக்கு வழி அமைப்பதாக முடியும்.

பிறமொழிகளிலுள்ள பல்துறை அறிவுச் செல்வங்கள் தமிழ்மொழிக்கு வந்து சேர வேண்டும் என்பதற்கும், அப்படி வரும் செல்வங்கள் ஊரறியும் தமிழில் சலசலவென எவ்விடத்தும் வேகமாக வர வேண்டும் என்பதற்கும் பாடல்கள் உள்ளன.” “தமிழ் ஒன்றே 29. இவ்வாசிரியரின் “பாரதீயம்’ என்றநூலில் (பழநியப்பா பிரதர்ஸ்,சென்னை-14)

“கல்விபற்றிய சிந்தனைகள்” என்ற கட்டுரை காண்க 30. நாள் மலர்கள்- பக்கம் 76 31. தமிழியக்கம் பாடல் 39 32. பாதா.க. முதல் தொகுதி-பக்கம் 95 (தமிழ் வளர்ச்சி)