பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 பாவேந்தரின் பாட்டுத்திறன் இருநூறு ஆண்டுகளாகவும் புழக்கத்தில் இருந்த (இன்றும் இருக்கும்) ஆங்கில மொழியை இணைப்பு மொழியாக ஏற்க மறுக்கின்றனர். “அயல்மொழி” என்று நொண்டிச் சாக்கு சொல்லித் தட்டிக் கழிக்கின்றனர். கவைக்குதவாத “மும்மொழிக் கொள்கை'யைத் தம்பட்டம் அடித்துக்கொண்டேயுள்ளனர். பேச்சு வழக்கில் இல்லாத அரபி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளை மூன்றாவது மொழியாகக் கொள்ளலாம் என்று சொல்லிக் கண்ணில் மண் தூவுகின்றனர். வடநாட்டில் எவரும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளைப் படிப்பதில்லை. பிற மாநிலங்களில் இந்தியை நேராகப் பரப்ப கோடிக்கணக்கான பணத்தைக் கொட்டிச் செலவு செய்கின்றனர். “அலுவல் பார்ப்பவர்கள் இந்தியைக் கட்டாயமாகப் படிக்கவேண்டும்” என்ற விதியைப் பிறப்பிப்பதும், எதிர்ப்பு எழுந்தால் திரும்பப் பெறுவதுமாகக் கண்ணாம்பூச்சி” விளையாடுகின்றனர். ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக ஏற்க இந்திய அரசியலமைப்பில் திருத்தம் செய்து சட்டமாக்கிவிட்டால் மொழிப் பிரச்சினைகட்கு ஒரு விதமாக முற்றுப்புள்ளி வைத்ததாக முடியும். தமிழகம், சில சமயம் வங்காளம் இதனை எழுப்புகின்றது. கேரளம், ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் ஒருமித்த குரலை எழுப்பினால் இதற்குக் கழுவாய் ஏற்படும். செய்வார்களா?

பிரச்சினைகளை அவ்வப்போது தீர்க்காமல் ஆறப்போட்டுக் கொண்டு போனால் அறுவை சிகிச்சை செய்யாத கட்டி புரையோடி உடலுக்கு ஊனம் விளைவிப்பதுபோல், ஒரு காலத்தில் அடக்கமுடியாத வன்மை பெற்று வெடிக்கச் செய்துவிடும். எழுபது ஆண்டுக் காலமான இரவிய சாம்ராஜ்யம் (Russian Empire) இன்று சிதைந்து பிரிந்து புதிய அமைப்புக்கு வழிகோலியது போன்ற நிலைமை எழாது காத்தல் நடுவண் அரசுப் பொறுப்பாகும். பொறுப்பை உணர்ந்து செயலாற்றுமா?

இதனால் கவிஞர் ஒரு சமயம்

இந்திய நாட்டரசியலை

ஒப்பவில்லை இந்திமொழி பொதுவாக்கல்

விரும்ப வில்லை