பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் Y 253 என்று இந்திய அரசியலமைப்பையே” எதிர்க்கத் துணிகின்றார். நடுவண் அரசு தமிழர்களின் உணர்வை மதித்து ஆவன செய்யுமா?

ஒத்துப் போகா உறவினர்கள்

உலகில் நமக்கிங் காரியரே செத்துப் போன மொழியுடலில் செழுமை யற்ற இந்திமொழி பித்துப் பிடித்தே ஆட்சியினால்

பெருமைத் தமிழுக் கிடையூறாய்த் தொத்திக் கொள்ளப் பார்க்கிறது

தொலைத்தல் தமிழர் கடனாமே!

அரிமா உலவும் காட்டினிலே

ஆரி யம்போல் வாழ்கின்ற நரிமா வுக்கும் இடமுண்டு

மறுக்க வில்லைநாம், ஆனால் அரிமா இடத்தில் தரிமாக்கள்

அட்ட காசம் செய்வதுமா? சரிப்படாது தமிழர்களே

சாய்ப்பீர் இந்த நரித்தனத்தை’ என்று வடக்கரின் நரித்தனத்தைச் சாடுகின்றார்.இந்தி எதிர்ப்பை ஓர் அறப்போராகக் கொள்ள வேண்டும் என்பது கவிஞரின் திருவுள்ளம், இந்தியைத் திணிக்கும் நோக்கத்தைக் கொண்ட மைய அரசின் மொழிக்கொள்கையை தமிழர்கள் எதிர்த்தார்கள். கவிஞர் போர்முரசு கொட்டினார்; சங்கநாதம் செய்தார்.

இந்தியை எதிர்த்திட வாரீர்-நம் இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்! என்கின்றார்.

கன்னம் கிழிந்திட நேரும் - வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்!”

41. வேங்கையே எழுக! - பக்கம் 102 42. வேங்கையே எழுக! - பக்கம் 105 43. வேங்கையே எழுக! - பக்கம் 76