பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 v பாவேந்தரின் பாட்டுத்திறன்

ஒற்றுமையைக் காப்பதற்கு மதமா! அன்றி ஒன்றாகச் சேர்க்கத்தான் மதமா?’ என்று கேட்பார். மேலும்,

சாதி சமயத்தினிலே வீழ்ந்தோர் அன்றே தொந்தி பெருத்தோர் அடியில் வீழ்ந்தோர் ஆவர். துவென்று சாதிமதம் கனன்று மிழ்ந்தால் அந்த நொடியே நமதுமிடி பறக்கும்’ என்று கிண்டல் செய்து அறிவூட்டுவார். முற்றிவரும் சாதிவெறி அழிய வேண்டும் என்பது இவர்தம் அதிராக் கொள்கை’

சாதி யொழித்துச்

சமயப்பித்தம் தொலைந்தால் மீதி இருத்தல்

விடுதலைதான் என்தமிழா என்று தெளிவான கருத்தைக் கூறுவார்.

சாதிவேற்றுமை ஒழிய வேண்டும் என்ற கருத்தைச் “சமத்துப் பாட்டில்” விரிவாகக் காணலாம்.

157

தாழ்வென்றும் உயர்வென்றும்

சமூகத்திற் பேதங் கொண்டால் வாழ்வின்பம் உண்டாகுமோ?

பிறப்பில் உயர்வுதாழ்வு

பேசும் சமூகம்மண்ணில் சிறக்கு மோ?* என்று வினாக்கள் தொடுக்கின்றார்; நம்மைச் சிந்திக்க வைக்கின்றார்.

மனிதரில் தாழ்வுயர்வு

வகுக்கும் மடையர்வார்த்தை இனிச்செல்ல மாட்டாது” 54. வேங்கையே எழுக! - பக்கம் 25 55. நாள் மலர்கள் - பக்கம் 36 56. நாள் மலர்கள் - பக்கம் 44 57. நாள் மலர்கள் பக்கம் 83 58. பாதா.க. மூன்றாம் தொகுதி-சமத்துவப்பாட்டு, பக்கம் 185 59. பாதா.க. மூன்றாம் தொகுதி. சமத்துவப்பாட்டு, பக்கம் 194