பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடல்கள் பகரும் செய்திகள் 263 இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்,

ஜாரரசன், இவனைச் சூழ்ந்து சமயமுள்ள படிக்கெல்லாம் பொய்கூறி

அறங்கொன்று சதிகள் செய்த சுமடர்சட சடவென்று சரிந்திட்டார்; புயற்காற்றுச் சூறை தன்னில் திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்

விறகான செய்தி போலே! குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு

மேன்மையுறக் குடிமை நீதி கடியொன்றில் எழுந்தது.பார்; குடியரசென்று

உலகறியக் கூறி விட்டார்; அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது

அடிமையில்லை அறிக என்றார்; இடிபட்ட கவர்போலே கலிவிழுந்தான்;

கிருதயுகம் எழுகமாதோ!” அருமையான பாடல்கள்; கருத்துச் செறிவுள்ளவை:நடந்தவற்றை அற்புதமாகச் சித்திரிப்பவை. பாடல்கள் தோன்றியநாள் முதல் இன்றுவரை மக்கள் வாக்கில் செல்வாக்குப் பெற்று வந்தன. ஆனால், பொதுவுடைமை எவ்வாறு நடைமுறையில் இருந்தது என்பது பற்றிப் பாடல்கள் பாரதியார் பாடவில்லை; அற்ப ஆயுளில் மறைந்து விட்டார். பாவேந்தர் பாரதிதாசன்தான் அக்கொள்கையை வானளாவப் புகழ்ந்து வந்தார்.

கொலை வாளினை எடடா! மிகு கொடியோர் செயல் அறவே” என்று ஆவேசத்துடன் கூறினார்.இக் கொள்கையினைத்திறல்நாட்டு மன்னன் மகன் அழகன் (கடல்மேற் குமிழிகள்) வாயில் வைத்தும் பேசினார்’. கதர்மன் பேச்சாக ("வீரத்தாய்) முழக்க மிட்டார். பாண்டியன் பரிசிலும்” (பக்கம் 99) வீரப்பன் பேச்சிலும்

68. பாரதியார் கவிதைகள் - புதிய ருஷியா - 5.6 69. பா.தா.க.முதல் தொகுதி-பக்கம் 175 70. கடல்மேற் குமிழிகள் - பக்கம் 59-60; 90