பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பாவேந்தரின் பாட்டுத்திறன்

விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி’ பகலில் கவிஞர் தொழிலாளர் நிலையைக் காண்கின்றார்;

கதிரவனும் காண்கின்றான். அந்திக்குப்பின் வானக்காட்சி கவிஞரின் கண்ணுக்குத் தென்படுகின்றது. கவிஞர் இரண்டு காட்சிகளையும் இணைத்துக் கதிரவனின் சினமாகிய வெப்பந்தான் வானத்தில் விண்மீனாய்க் “கொப்பளித்ததாகக் கூறுவதில் இயைபுக் கற்பனையைக் காண்கின்றோம். இதே கருத்தைப் பிறிதோர் பாடலில் இயைபுக் கற்பனை செறிந்த பாடலாக அமைக்கின்றார்.

வந்தேறிகளால் நொந்தழு வார்போல்

கோடைக் கொடுமையில் வாடலானோம்

புரட்சியின் புழுக்கத் தின்பின்

பொதுவுடை மைபோல் புகுந்தது மாரியே எங்கிருந்தோ வந்தவர்கள் கோடைபோல் வாட்டுகின்றனர். கோடைக்குப்பின் மாரி வந்து கோடை வெப்பத்தைத் தணிப்பதுபோல் பொதுவுடைமை வந்தேறிகளின் கொடுமையை இல்லாமல் செய்துவிடுகின்றது. அற்புதமான இயைபுக் கற்பனை!

கருத்து விளக்கக் கற்பனை இயற்கைக் காட்சிகளைக்

கண்ணுற்ற கவிஞன் தான் கண்டவற்றை அப்படியே கூறாது அக்காட்சிகளால் தன் உள்ளத்தில் கிளர்ந்தெழும் உணர்ச்சிகளை மட்டிலும் சித்தரித்தால் அதனைக் கருத்து விளக்கக் pU505) (Interpretative imagination) Tsr) & spoussus. 52(5 நிகழ்ச்சியிலிருந்தோ அல்லது ஒரு பொருளிலிருந்தோ அதன் ஆன்மீக மதிப்பை அல்லது உட்குறிப்பை மட்டிலும் கண்டு, அவையடங்கிய பகுதிகளையோ, அன்றி தன்மைகளையோ எடுத்துக் காட்டுவது கருத்து விளக்கக் கற்பனையாகும் என்பர் வின்செஸ்டர். இத்தகைய கற்பனைதான் கவிதைக்கு உண்மையான உணர்வைத் தருகின்றது. கவிதைத் துறையில் மேதையாக உள்ளவர்கள் தாம் காணும் காட்சிகளையும், நிகழ்ச்சிகளையும் ஒன்று விடாது அப்படியே வருணிப்பதில்லை;

9. அழகின் சிரிப்பு பக்கம் 30 10. குயில் பாடல்கள் பக்கம் 74

ιτο