பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பனைத் திறன் Y 59

வருணிப்பதைவிடப் பொருளுணர்த்துவதில்தான் அவர்களுடைய கவனம் அதிகமாகச் செல்லும், பாவேந்தர் பாடல்களில் இத்தகைய கற்பனையைக் காண்போம்.

உலகப்பார்வை: “ஏறு! வானை இடிக்கும் மலைமேல், ஏறு! விடாமல் ஏறு மேன்மேல்!” என்று மானிடன் ஒருவனை வழிப்படுத்தி உலகப் பார்வையை நல்குகின்றார்.

ஏறி நின்று பாரடா எங்கும் எங்கும் பாரடா இப்புவி மக்களைப் பாரடா உனது மானிடப் பரப்பைப்; பாரடா உன்னுடன் பிறந்தபட் டாளம்: “என்குலம்” என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சி கொள்! அறிவை விரிவுசெய்! அகண்ட மாக்கு. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை! அனைத்துக் கொள்!உனைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்று கூவு: பிரிவிலை எங்கும் பேத மில்லை உலகம் உண்ணஉண்: உடுத்த உடுப்பாய்! புகல்வேன்: உடைமை மக்கட்குப் பொது புவியை நடத்து பொதுவில் நடத்து: வானைப் போல மக்களைத் தாவும் வெள்ள அன்பால் இதனைக் குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!” இதில் மானிடம் ஒன்று என்றும், தன்னை அதனிடம் ஐக்கியப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், உண்ணும் உணவும், உடுத்தும் உடையும் பொதுவென்றும், இப்பரந்த மனப்பான்மையை குள்ள மனிதர்க்கும் உணர்த்த வேண்டும் என்றும் கருத்துக்களை கற்பனையாக விளக்குகின்றார்.

இருப்போர் இல்லாதார்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த அறம், அப்படிச் செய்கின்ற கொடை கொள்ளல் தன்மை போற்றுதற்குரியது

11. பாதா.க. முதல் தொகுதி-பக்கம் 149-150