பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 பாவேந்தரின் பாட்டுத்திறன் என்று தமது கருத்து மலர்களை அடிப்படையாகக் கொண்டு விளக்குவார். செங்காந்தள் மலர் விரித்து ஏந்தினாற்போல் இருப்பதும் புன்னைபலர் பூத்து உதிர்வதும், சோலையில் குயில்கள் கூவுவதும் இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சிகள், இவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது அறக் கருத்தை விளக்குவார்.

தின்றசெங் காத்தட்பூதேரிற்கையேந்தநெடுங்

கொன்றைமலர் பென்னைக் கொட்டுகின்றான் - என்றே

அடை குயில்கள்ளக் காளமிட்டு ஆர்த்தனவே மண்ணில்

கொடைவாழ்க என்று குறித்து” இப்பாடலில் மேற்குறிப்பிட்ட கருத்தும், காட்சிகளும் பரிமாறப் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம். இவற்றைத் தவிர, உள்ளவாறு கற்பனைகளும் உள்ளம் விழையுமாறு அமையும் கற்பனைகளும் உள்ளன. அவற்றை வந்துழிக் கண்டு மகிழலாம்.

“பொதுவாகக் கற்பனை மனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகின்றது” என்பது உளவியலாரின் கருத்து. னைத்தின் உசம் அதன் கற்பனை ஆற்றலில் உள்ளது என்றும் அத்தகைய நல்லுனர்வைத் தருவது கவிதை என்றும் “ஆபர்குரோம்பி என்ற திறனாய்வாளர் கருதுவார். எனவே, கற்பனையை நன்கு உணர்ந்து கவிதையை அநுபவிக்க வேண்டும் என்றாகின்றது. இவ்விடத்தில் கற்பனையைப் பற்றி பி. அலெக்சாண்டர்’ என்ற உளவியலறிஞர் கூறியது நினைவுகூர்தற்பாலது. “உளம் அல்லது ஆன்மாவின் ஆற்றலே கற்பனை என்பது காரணம், அதுதான் மனச் செயல்களனைத்தையும் ஒருங்கு பிணைப்பது. அது புலன்களின் (Senses) ஆணையினின்று விடுபட்டதால் புலன் காட்சியினின்றும் (Perception) வேறுபட்டது. அது நினைவினின்றும் வேறுபட்டது; காரணம், நினைவு முன்னர் அநுபவித்த ஒன்றை இருத்துதலை மட்டிலும் செய்கின்றதேயன்றி, புதிதாக ஒன்றைப் பெறுவதில்லை. அது உள்ளக் கிளர்ச்சியினின்றும் (Emotion) வேறுபட்டது; காரணம், கற்பனை ஓர் ஆற்றலேயன்றி ஊக்கி (Motive) அன்று. அது புரிந்து கொள்ளுதலினின்றும் (Understanding) Goup/UELgil; 5mm smith, 12. முல்கலக்காடு. பக்கம் 31