பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமைச் செயலகம், சென்னை - 600 009.

நாள்:113.99

அணிந்துரை பேராசிரியர் டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் அவர்கள் “பாவேந்தரின் பாட்டுத்திறன்’ எனும் பெயரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளில் காணப்படும் பல்வேறு திறன்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதியுள்ள நூல் கண்டு மகிழ்ந்தேன்.

“பாட்டுத்திறத்தாலே-இவ்வையத்தைப் பாலித்திட வேணும்!” எனப் பாடினார் பாரதியார். அப்பாரதியின் தாசன் - பாரதிதாசன் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழ்ச் சமுதாயத்தைப் பாலித்திடும் - பாதுகாத்திடும் தன்மையுடையதாகும்.

பேராசிரியர் சுப்பு ரெட்டியார் கல்வியியல் வல்லுநர்; ஆசிரியர் பயிற்சிக்குரிய நூல்கள் உட்பட பல்வேறு இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். அவர், இந்நூலில் பாரதிதாசன் பாடுபொருளாகக் கொண்டவற்றைப்பட்டியல்படுத்துகிறார். கற்பனைத்திறன், கவிதைவளம், Eப்புநெறி, உவமைத் திறன், வருணனைத் திறன், முதலியவை குறித்து விரிவாக ஆராய்ந்து பாரதிதாசனின் அரிய கருத்துகளை எடுத்து மொழிகிறார்.

“தாவென்று சாதிமதம் கான்று மிழ்ந்தால் அந்தநொடியே நமது மிடிபறக்கும் அடுத்தநொடி திராவிடரின் கொடிபறக்கும்” (பக். 44) என்று தமிழரின் ஒற்றுமைக்குத் தடையாயுள்ள சாதி மதங்கள் அகற்றப்படவேண்டும் என்ற பாரதிதாசனைப் படம்பிடித்துக் காட்டுகிறார். தமிழ் மண்ணில் பிறந்து - வளர்ந்து - இந்த மண்ணின் பயன்களை நுகர்ந்து நல்வாழ்வு பெற்று வாழும் மாந்தரில் பலர் தமது

-vi