பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பாவேந்தரின் பாட்டுத்திறன் ‘அச்சடித்த பதுமை”, “எழுதாத சித்திரம்'- இவை"புரட்சிக் கவி”யில் கண்டவை. கிளியேந்தல் போலேந்தி”, “கைத்தூண்டிற் சிறுமீன்”, “தேனடையும் ஈயும் போல்”, “நெய்யாலே மூண்டெழுந்த நெருப்பு”, “வல்லுறு: குறிவைத்த புறா, * மொழியாள்”, ‘முப்பழத்தின் சாற்றுக்கு நிகரான மொழியாள்”, “கோக்காத முத்து”, “செவ்விதழின் கதவுடைத்து வரும் சிரிப்பு”, “கமழாத புதர் பூப்போல்”, “கவனோடும் கல்லைப்போல் விரைதல்”, “யாழ்ச் சொல் அன்னம்”, “கொடிக்கு நிகர் இடையாள்’, ‘பாளைக்கு நிகரான நகைமுகம்’, . இவை"பாண்டியன் பரிசில்” கண்டவை. இங்ஙனம் பாவேந்தர் அரிய இனிய செஞ்சொற்றொடர்களைத் தமது இதயமாகிய நாணயச் சாலையினின்றும் ஆக்கித் தந்துள்ளார். இச்செஞ்சொல் அடிகள்தோறும் தொடர்ந்து சென்று தெவிட்டாத தீங்கவியாய் நம்மை மகிழ்ச்சிக் கடலுள் ஆழ்த்தும் இடங்களும் மிகமிகப் பலவாக உள்ளன.

அன்னமும் நீலியும் ஒடத்தில் சென்ற காட்சி:

நீர்தேங்கும் செய்யாற்றின் ஓடம், துன்பம்

தினைத்தேங்கும் அன்னத்தை நீலி யைப்பூத் தார்தாங்கும் தட்டம்போல் தன்பால் தாங்கத்

தடக்கையால் துடுப்பசைய ஒட்டு வார்கள் ஆர்தாங்கள் எனக்கேட்டும் இன்பம் ஊட்டும்

அரும்பாட்டுப் பலஇசைத்தும் ஒட்ட லானார் சீர்தேங்கும் வெள்ளன்னம் அசைந்தி டாது

செல்லல்போல் தெண்ணீரில் சென்ற தோடம்’ வேலன் அன்னத்தைக் காதலிக்கின்றான் என்பதுபற்றிப் பல பாடல்கள். அவற்றில் ஒன்று;

தேனைப்போல் மொழியுடையாள் அன்ற லர்ந்த

செத்தாமரைமலர்போல் முகத்தாள், கெண்டை மீனைப்போல் விழியுடையாள் விட்ட திர்ந்த

மின்னைப்போல் நுண்ணிடையாள், கொண்ட யாவும்: வானைப்போல் உயர்வாழ்வு வாழ்ந்தாள்; என்றன் மகிழ்ச்சிக்கு மகிழ்ந்து நான் நைந்தாள் நையம்

3. பாண்டியன் பரிசு - இயல் 52