பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பாவேந்தரின் பாட்டுத்திறன்

கெடும்படியே சொல்லிவைத்தார் புலவர், நேரில்

கிழக்கினையும் மேற்கென்று கிளத்து வார்போல்:

என்ற பாடல்களைப் பாடிப்பாடி சொல்வளத்தைச் சுவைத்து மகிழலாம். மிளகு மிட்டாய் போன்ற புதிய வகை மிட்டாய்களைச் சுவைத்து உமிழ்நீருடன் விழுங்குவதுபோன்ற அநுபவத்தைப் பெறலாம்.

உணர்ச்சிக்கேற்ற சொற்கள். தமிழியக்கத்தைச் சார்ந்த ஒரு தொண்டர் மேடைமீது நின்று கொண்டு உணர்ச்சி மிக்க சொற்பொழிவு ஒன்றை நிகழ்த்துகின்றார். அவர் பேசிய பேச்சில் மொழி பற்றிய பல்வேறு பிரச்சினைகளைப் பற்றிய பல செய்திகளைப் பாங்குறக் கூறும்பொழுதெல்லாம் அவ்வவற்றிற்கு ஏற்றவாறு சொற்களும், ஒலிகளும் வருவதைக் காணலாம். அவரே, தம் இல்லத்தினுள் சென்று தம் காதலியுடன் கொஞ்சிப் பேசும் பேச்சிலும், தம் குழந்தையுடன் நெகிழ்ந்து பேசும் பேச்சிலும் இனிய சொற்களும், குழைவான சொற்களும், ஒலிகளும் வெளிப்படுவதைக் காணலாம். உணர்ச்சியுடன் பேசும் உரையாடலிலேயே இவை வருவதாயின் உணர்ச்சிக்கு வடிவம் தரக்கூடிய கவிதையில் இவை எவ்வளவு இன்றியமையாதவை என்பது பெறப்படும்.

சமூக சீர்திருத்தத்தையும், தொழிலாளர் இயக்கத்தையும் ஆதரிக்கும் கவிஞர் பேசுகின்றார். * ---------...-.

சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்

தாங்கிநடை பெற்றுவரும் சண்டை யுலகிதனை ஊதையினில் துரும்புபோல் அலைக்கழிப்போம்,

பின்னர், ஒழித்திடுவோம்; புதியதோர் உலகம் செய்வோம்!

என்ற பாட்டிலும்,

இந்தி எதிர்ப்பைப்பற்றிப் பேசும் பாடல்களில் வெறுப்பும், சினமும் பொங்கிவரும்போது,

5. பாண்டியன் ரிக இயல் 87 7. சதா.க.முதல் தொகுதி. முன்னேறு -1