பக்கம்:பாவேந்தரின் பாட்டுத்திறன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு நெறி Y 83 பன்னிரண்டு அடிப் பாடலும் “கலிவெண்பா'என்று குறிக்கப் பெற்றுள்ளது. (இங்குள்ள காட்டு காண்க). பல பாடல்களில் எந்தக் குறிப்பும் இல்லை. தனிச்சொல்லை வைத்துப் பாவேந்தர் இவற்றிடையே வேறுபாடு கொண்டாரா? என்பது துணியக் கூடவில்லை. பாவேந்தர் படைப்புகளில் பதினைந்து விழுக்காடு வெண்பாக்களாக உள்ளன.

பன்னிரண்டடிக்கு மேற்படாத பஃறொடை வெண்பாக்களைப் “பாரதிதாசன் கவிதைகள் - முதற்பகுதி, இரண்டாம்பகுதி, கடல்மேற் குமிழிகள்” ஆகிய நூல்களிலும் பன்னிரண்டடிக்கு மேற்பட்டவற்றை (மற்றவர் கருத்துப்படி கலிவெண்பாக்களை) ‘பாரதிதாசன் கவிதைகள்- பகுதி 1,2,3,4, குடும்பவிளக்கு இசையமுது- முதற்பகுதி, எதிர்பாராத முத்தம், கடல்மேற் குமிழிகள், காதல் நினைவுகள், முல்லைக்காடு, தமிழச்சியின் கத்தி, பொங்கல் வாழ்த்துக் குவியல், குறிஞ்சித்திட்டு, பன்மணித் திரள், காதல் பாடல்கள், குயில் பாடல்கள், நாள் மலர்கள்” ஆகிய நூல்களிலும் காணலாம்.

ஆசிரியப்பா வகைகள்

6. நேரிசையாசிரியப்பா ஆசிரியப்பாவின் பொதுவிலக்கணம் பொருந்தி, ஈற்றயலடி முச்சீரான் வரப்பெறுவது நேரிசை ஆசிரியப்பாவாகும். (எ-டு) குளக்கரை தன்னில் கொம்பு கொண்டு,பல

விளக்கும் அழகனை வேலன் அணுகி “எவ்வூர்?” எனஅவன் “இவ்வூர்” என்றான் “என்ன அலுவல்?” என்றான் அழகன் “மன்னன் மகனின் துணையாள்” என்றான், வேலன் “வணக்கம்” என்றான்” “பாரதிதாசன் கவிதைகள் - 1, 2, 3, 4, எதிர்பாராத முத்தம், இருண்ட வீடு, காதல் நினைவுகள், கடல்மேற் குமிழிகள், குடும்ப விளக்கு, முல்லைக்காடு, காதலா? கடமையா?, கடலமுது - பகுதி 2. பொங்கல் வாழ்த்துக்குவியல்,குறிஞ்சித்திட்டு,பன்மணித்திரள், காதல் பாடல்கள், குயில் பாடல்கள், ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, தமிழுக்கு

11. கடல்மேற் குமிழிகள் பக்கம் 40