பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 104 வேறு சிலர் இசை நாடகத்தமிழில் ஈடுபாடு கொண்டிருப்பர். பாரதி கூட இயல், இசை இரண்டிலுமே அதிக கவனம் செலுத்தினார். நாடகத்துறைப் பக்கம் செல்லவில்லை. ஆனால் பாவேந்தருக்கோ முத்தமிழிலும் ஈடுபாடு இருந்தது. இளமையிலிருந்தே இவருக்கு நாடகப் பித்து இருந்தது. பள்ளியில் ஆசிரியராகப் பல ஊர்களிலும் இருந்தபோது மாணவர்கள் நடிப்பதற்காக நிறைய நாடகங்கள் எழுதியிருக்கிறார். இவர் தமது மக்களான சரசுவதியும் கோபதியும் நடிப்பதற்காகவென்றே கவிதை நாடகம் எழுதியிருக்கிறார். இவர் எழுதியுள்ள இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற நாடகம் கி.பி.1948ஆம் ஆண்டு தமிழக அரசினால் தடை செய்யப்பட்டது, 5.9.48இல் காஞ்சி சீர்திருத்த நாடக சபையினர், வடஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவந்திபுரத்தில் இத்தடையை மீறி நாடகம் நடத்தினர். அன்று பிற்பகல் காவல் துறையினர் இந்நாடகம் தடை செய்யப்பட்டிருக்கிறது; பொது மக்கள் இதனைப் பார்க்கக் கூடாது என்று தண்டோரா போட்டு விளம்பரம் செய்தனர். என்றாலும் நாடகம் பார்க்க ஐயாயிரம் பேர் கூடிவிட்டனர். காவல்துறையினர், வேடமிட்டிருந்த நிலையில் அப்படியே நடிகர்களைக் கைது செய்தனர். ஒருமுறை சென்னையில் இந்நாடகத்தை நடத்துவதற்காகப் பாவேந்தர் முயற்சி செய்து வந்தார். புதுவையிலிருந்து பள்ளி விடுமுறை நாட்களில் சென்னை சென்று ஒத்திகை நடத்திவிட்டு வருவாராம். இவ்வொத்திகை சென்னையில் அண்ணாப்பிள்ளை தெருவில் நடந்தது. அப்போது நாடகத்தில் பங்குபெற்று நடிப்பதற்காகத் திருவாளர்கள் குருசாமி திருவாசகமணி, திருமதி சத்தியவாணிமுத்து ஆகியோர் பாவேந்தரிடத்தில் பயிற்சி பெற்றனராம். கி.பி. 1944ஆம் ஆண்டில் பாவேந்தரே சில நண்பர்களின் துணையோடு ஒரு நாடகக் குழுவை அமைத்து இன்ப இரவு என்ற நாடக நிகழ்ச்சியை நடத்தினார். பாவேந்தரின் இயல், இசை, நாடகப் படைப்புகள் அதில் இடம்பெற்றன. பொன்னி ஆசிரியர் முருகு சுப்பிரமணியமும் நாமக்கல் மு. செல்லப்ப ரெட்டியாரும் நாடகக் குழுவின் பொறுப்பாளர்களாக இருந்தனர். சென்னையில் இருந்தபோது தமது 70ஆம் வயதிலும் தேர்தல் பிரசார நாடகத்துக்குப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். இளமையிலிருந்தே இவரிடத்தில் பொதிந்திருந்த நாடக ஈடுபாடே இவரைத் திரைப்படத் துறைக்கு இழுத்துச் சென்றது. முதன் 1. திரு. குருசாமி இரணியன், திருவாசகமணி பிரகலாதன்.