பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு uctssveoёвұрғыһ- - 105 சென்னையில் ஒருமுறை தங்கியிருந்தபோது, சர்மாவும் உடன் இருந்தாராம். சர்மா தாம் வழிபடும் அம்பிகையின் மீது ஒரு பாடல் எழுதித் தரும்படி வேண்டிக் கொண்டார். பாவேந்தர் மறுத்தார். சர்மா பல தடவை வற்புறுத்தவே சரி, சொல்றே எழுதிக்க...' என்று கூறிவிட்டுப் பாடலைச் சொல்லத் தொடங்கினார் பாவேந்தர். அந்தப் பாடல் தம்மிடத்தில் வந்த பிறகு, தம் வாழ்க்கையிலேயே பெரிய திருப்பம் ஏற்பட்டு விட்டதென்றும், அதன் பிறகு தாம் வாழ்க்கையில் தொல்லை எதுவுமின்றி வசதியோடும் புகழோடும் இருப்பதாகவும் சர்மா என்னிடம் கூறினார். பாவேந்தருடைய வாழ்க்கையில் கடவுள் இவ்வாறு பல இடங்களில் குறுக்கிட்டிருக்கிறார். நான் பாவேந்தரோடு சென்னையில் பழகிய நாட்களில் ஒருநாள் கூட என்னிடத்தில் கடவுளைப் பற்றி அவர் பேசி நான் கேட்டதில்லை. ஆனால் கடவுள் பக்தர் சிலர் அவரிடம் உள்ளங் கலந்த நண்பர்களாகப் பழகியதைப் பார்த்திருக்கிறேன். மாரடைப்பால் தாக்கப்பட்டுச் சென்னை அரசினர் மருத்துவ மனையில் படுத்திருந்தபோது, அப்பா! அப்பா!' என்று அன்போடு பழகும் அனுசூயா வடபழனி முருகன் கோவிலிலிருந்து திருநீறு கொண்டு வந்து பாவேந்தர் நெற்றியில் பூசினார். என்ன மந்திரமா? என்று சொல்லிப் பாவேந்தர் அதைக் கலைத்துவிட்டார். இதுதான் சாகும்போது பாவேந்தருக்கிருந்த கடவுட் கொள்கை. நான் கி.பி. 1962 ஏப்ரல் வாக்கில் என் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு சேலம் திரும்பிவிட்டேன். நான் சேலம் திரும்பியதும், நின்று போயிருந்த குயில் இதழை மீண்டும் தொடங்கினார் பாவேந்தர். நான் ஊருக்குப் புறப்படும்போது, "என்னுடைய பாடல்களை நீ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பு: நான் குயிலில் வெளியிடுகிறேன்” என்று சொன்னார். "ஒரு சிறந்த கவிஞரின் கவிதையைக் கருத்துக்கெடாமல் வேற்று மொழியில் மொழி பெயர்ப்பது என்பது மிகவும் சிக்கலான வேலை. உங்கள் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அளவுக்கு எனக்கு ஆங்கிலப் புலமை இல்லை” என்று சொன்ன்ே. "பரவாயில்லை. தெரிந்த அளவு மொழி பெயர்ப்பு செய்” என்று கட்டளையிட்டார். நான் அழகின் சிரிப்பில் உள்ள 'வானவில்’ பற்றிய பகுதியையும் பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதியில் உள்ள சுதந்தரம் யாத்திரை போகும்போது என்ற பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்பினேன். அப்பாடல்களைத் 1. காண்க: பிற்சேர்க்கை-4