பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நினைவில் நின்றவை வைத்திருந்த என் தம்பி அவரை விருந்துக்கு அழைத்தான். என்ன item? என்றார் பாவேந்தர். 'வான்கோழி பிரியாணி என்று கூறினான் என் தம்பி. அப்படியா? சரி போவோம்! என்று எழுந்தார். பாவேந்தர் அருகில் அமர்ந்திருந்த பார்ப்பன நண்பர் அப்ப. நா. வர்ரங்க' என்று சொல்லிக் கைகூப்பிவிட்டு அவசரமாக நகர்ந்தார். நீ... சாப்பிடலயா? வான்கோழி பிரியாணி... எளிதா கிடைக்காத tem என்றார் பாவேந்தர். வேண்டாங்கய்யா. நா வர்ர...' என்றார் அந்த நண்பர். ஏ? கோழி கொத்திப்புடுமுன்னு பயப்படறியா? என்று கேட்டுவிட்டு உரக்கச் சிரித்தார். பார்ப்பனநண்பர் முகத்தில் அசடு வழிந்தது. இதை இரவில் நான் துங்கும்போது நினைத்தாலும் குபிரென்று சிரிப்பு வரும். மறுமுறை நான் சென்னை சென்றிருந்தபோது, மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஹவுஸ்சர்ஜனாகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த என் இளைய தம்பியின் வேலை தொடர்பாகப் பாவேந்தரைச் சென்று பார்த்தேன். மந்திரி மஜீத்தைத் தாம் இரண்டுமுறை இதுபற்றிச் சென்று பார்த்ததாகச் சொன்னார். நீ எதற்காக வீண் செலவு செய்து கொண்டு வந்தாய்? கடிதம் போட்டால் போதாதா? நான் பார்த்துக் கொள்கிறேன். நீ போ!' என்று சொன்னார். ஆனால் மந்திரி மஜீத்தை அவரால் மீண்டும் பார்க்க முடியவில்லை. கவிஞர் மாநில மாநாடு சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் 1963ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 9,10 தேதிகளில் நடைபெற இருந்தது. இராசிபுரம் திருக்குறள் ஆட்சி மன்றத்தைச் சேர்ந்த திருவாளர்கள் கி. அரங்காசமி, செ.அங்கமுத்து ஆகிய இருவரும் அம்மாநாட்டை முன்னின்று நடத்தினர். இச்செய்தியை முன்கூட்டி அறிந்த நான் பாவேந்தருக்கு இதுபற்றிக் கடிதம் எழுதிக் கேட்டேன். அவரிடமிருந்து கீழ்க்கண்ட கடிதம் வந்தது. திரு.புலவர் அவர்களே அஞ்சல் கிடைத்தது நான் 8.11.63 காலை எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் புறப்பட்டு வருகிறேன். என்னை, பஸ் சந்திப்பு நிலையத்தில் சந்திக்க வேண்டுகிறேன் பிற நேரில். -பாரதிதாசன்