பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 _நினைவில் நின்றவை உண்பார் என்று பட்டியல் போட்டுக் கொண்டு அதன்படி என் மனைவியைச் சமைக்கச் சொன்னேன். அவரோடு நான் முதலிலே குறிப்பிட்டிருந்த மெய்க்காப்பாளரும் காக்கி உடுப்போடு வந்திருந்தார். அவ்விருவரும் கூப்பிட்ட சொல்லுக்கு ஏனென்று கேட்க மாணவர் இருவரை அறையின் வாசலிலே நிற்க வைத்திருந்தேன். பாவேந்தர் விடுதிக்கு வந்ததும் காப்பி சாப்பிட்டு விட்டுப் பயணக் களைப்புத் தீர்வதற்காகக் கொஞ்ச நேரம் படுத்திருந்தார். மாலை 6 மணி இருக்கும். முருகு! நான், மருத்துவரிடம் செல்ல வேண்டும்; மூச்சு இரைக்கிறது. இன்சொலின் போட்டுக் கொள்ள வேண்டும்' என்று கூறினார். நான் அருகிலிருந்த டாக்டர் K.N. ராவிடம் அழைத்துச் சென்று ஊசிபோட ஏற்பாடு செய்தேன். மிகவும் களைப்பாகத் தென்பட்ட பாவேந்தர் ஊசி போட்டுக் கொண்டதும் தெம்பாகவும் சுறுசுறுப்பாகவும் காணப்பட்டார். பாவேந்தர் சேலம் வந்திருக்கிறார் என்ற செய்தி தெரிந்ததும் பல புலவர்களும் நண்பர்களும் அவரைத் தேடி வந்துவிட்டனர். பேச்சு தமிழைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் திரும்பியது. அப்போது அங்கு வந்திருந்த திருக்குறள் இராமசாமி என்ற புலவர் வள்ளுவர் புலால் மறுத்தலைப் பற்றி வற்புறுத்திக் கூறியிருக்கிறாரே! அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று பாவேந்தரைக் கேட்டார். இந்தக் கேள்வியை அவர் கேட்டுக் கொண்டிருந்தபோது மீன் குழம்பும் புறா வறுவலும் அடங்கிய சாப்பாட்டுத் துக்கு என் வீட்டிலிருந்து வந்து சேர்ந்தது. பாவேந்தர் அப்புலவரை உற்றுப் பார்த்து வள்ளுவரின் புலால் மறுப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தமிழன் உருப்பட மாட்டான்; கோழையாகி விடுவான். வெறும் கத்தரிக்காயையும் வெண்டைக்காயையும் தின்று தின்று தமிழனுடைய வீரமே போச்சு. கோழி, ஆடு இவற்றை அறுக்கணும். அவற்றிலிருந்து பீறிட்டடிக்கும் பச்சை ரத்தத்தைச் சிறுவர்கள் பார்க்கணும். அப்பத்தா.. அவுங்க அச்சம் நீங்கும்!’ என்றார். புலவர் அதிர்ச்சியால் வாயே திறக்கவில்லை. அடுத்தநாள் காலை 10 மணிக்கு மேல் நாங்கள் கவிஞர் மாநாட்டுக்காக இராசிபுரம் புறப்பட்டோம். மாநாட்டுத் தலைவராகிய பாவேந்தர் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் விவேகானந்த நகர் ஏசு மாளிகையிலிருந்து மாநாடு நடைபெறவிருந்த அரங்க விலாசத் திரைப்படக் கொட்டகைக்கு மேளதாளத்தோடு அழைத்துச் செல்லப்பட்டார். மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாகத்