பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 முருகுசுந்தரம் அடிமனத்தில் ஏற்பட்ட ஏக்கங்களும் ஏமாற்றங்களும் அவருடைய வாழ்க்கையின் பின்விளைவுகளுக்குக் காரணமாயின. அடக்கப் பட்ட பெண்ணினம் தளைகளை உடைத்து எழுகின்ற நிலை வெள்ளையானையில் சுட்டப்படுகிறது. காண்டேகர் எழுதிய எரிநட்சத்திரம் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு கவிஞர் முருகுசுந்தரம் எரிநட்சத்திரம் எனும் நெடுங்கவிதையைப் படைத்தார். உல்கா என்பவள் காண்டேகர் படைத்த எரிநட்சத்திரம். வீணா என்பவள் முருகுசுந்தரம் படைத்த எரிநட்சத்திரம். சமூகக் கொடுமைகளைச் சாடுகின்ற படைப்பாகவும் தமிழின மீட்சிக்குத் துணை நிற்கும் வலிமைமிக்க எழுத்தாயுதமாகவும் இந்நூல் விளங்குகிறது. கவிஞர் முருகுசுந்தரம் திறன்மிக்க கவிஞர் என்பதோடு உரைநடை நூல்களை எழுதுவதில் வல்லவர். 18 உரைநடை நூல்களை எழுதியுள்ளார். கவிஞர் முருகுசுந்தரம் அவர்கள், அவரது காலத்தில் வாழ்ந்த உவமைக் கவிஞர் சுரதா குறித்து சுரதா ஒரு ஒப்பாய்வு என்ற நூலை எழுதியுள்ளார். பாவேந்தர் படைப்பில் அங்கதம் என்ற உரைநடை நூலும் குறிப்பிடத்தக்கது. கவிஞர் முருகுசுந்தரம் அவர்கள் பாவேந்தர் பாரதிதாசன் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விடுதியில் 1962ஆம் ஆண்டு தங்கியிருந்த போது பாவேந்தர் பாரதிதாசனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றார். பாவேந்தர் பாரதிதாசனோடு கொண்டிருந்த தொடர்பு குறித்த கவிஞர் முருகு சுந்தரம் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார். "அவர் வீடு தியாகராயநகர் இராமன் தெருவில் இருந்தது. இப்பழக்கம் இரண்டாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. பாவேந்தர் சேலம் ஒருமுறை வந்து எனது விருந்தினராகத் தங்கினார். சென்னையில் அவரோடு பழகிய காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளைப் ’பாவேந்தர் நினைவுகள் என்ற தலைப்பில் நாட்குறிப்பாக எழுதினேன்; கவிதை பற்றி அவரிடம் நிறையக் கற்றுக் கொண்டேன்.