பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

unoasso-soloeopaio 117 Phone; 600&396 கம்பன் அடிப்பொடி Kamban Manimandapam Kamban Adippodi Karaikudi - 623 002 ஒம் 20.5.76 அன்புள்ள முருகுசுந்தரம் அவர்கட்கு வணக்கம்; உங்கள் 17.5.76 கடிதம். நன்றி. பாவேந்தர் வரலாற்றைத் தொகுத்தெழுதும் உங்கள் முயற்சியை வரவேற்கிறேன். முழுவெற்றி பெற வாழ்த்துகிறேன். பாரதீய ஞானபீடம் எவ்வித வேறுபாடுமின்றி இந்திய இலக்கியப் படைப்பிற்கு ஆண்டுதோறும் ஓரிலக்க ரூபாய் பரிசு வழங்குவது நாமெல்லாம் அறிந்ததே. 1964ல் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், திரு. பெரியசாமித் துரன் இவர்களுடன் யானும் சேர மூவர் குழு பரிந்துரை செய்ய நியமிக்கப் பெற்றது. தெ.பொ.மீ.அக்குழுத் தலைவர் எங்களுள் மாறுபடின்றி மூவரும் பாவேந்தர் தாம் பரிசுக்குரியவர் என்ற ஒரே முடிவுக்கு வந்தோம். அங்ங்னமே எங்கள் பரிந்துரையை முறைப்படி ஞானபீடத்திற்கு அனுப்பி வைத்தோம். இத்தகவலைப் பாவேந்தர் மகனிடம் யானே நேரில் கூறினேன். இதில் ராஜாஜி எந்தவிதத்தும் தலையிடவில்லை. தலையிடவும் மாட்டார்கள். ஆனால் எங்கள் பரிந்துரை பற்றி அவர்களிடம் கூறினேன். அவர்கள் எங்கள் முடிவு சரியானதே என்றும் கொள்கைக் கோலை வைத்துக் கவிதையை அளக்காத எங்கள் முறையே நன்றென்றும் கூறிப் பாராட்டினார். பாரதிதாசன் கவிதை நலத்தையும் மனிதப் பண்பாட்டையும் மதிப்பதற்குக் கொள்கை அல்லது கட்சிச் சார்பு என்றுமே தடையாக அமையப்படாது என்பதே அக்குழுவிலிருந்த மூவருடைய ஒருமித்த கருத்து. உங்கள் பணி செம்மையாகவும் திறமையாகவும் நிறைவேறும் என்பதற்கு உங்கள் ஆர்வமும் அணுகுமுறையுமே சான்றாக உள்ளன. வாழ்க! அன்பன் கம்பன் அடிப்பொடி