பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் | 1 தமிழகம் முழுவதும் நான் சென்று பாவேந்தரோடு பழகிய நண்பர்களிடம் பேட்டி எடுத்து அவரைப் பற்றி நான்கு நூல்தொகுப்புகள் வெளியிட்டேன். அவை எல்லாம் ஒன்றாகத் திரட்டப்பட்டு அவருடைய நூற்றாண்டு விழாவின்போது 'பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்' என்ற பெயரில் பெருநூலாக வெளிவந்தது” என்கின்றார். பாவேந்தர் நினைவுகள் (1979), அரும்புகள் மொட்டுகள் மலர்கள் (1981), குயில் கூவிக் கொண்டிருக்கும் (1985), புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள் (1985) ஆகிய நான்கு நூல்களையும் கவிஞர் மீரா அவர்கள் வெளியிட்டார். பாரதிதாசன் நூற்றாண்டு விழாவின்போது இந்நான்கு நூல்களையும் ஒன்றாகச் சேர்த்து பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம் என்ற தலைப்பில் 1990ஆம் ஆண்டு கவிஞர் மீரா அவர்கள் வெளியிட்டார். நூல் வெளிவந்து 17 ஆண்டுகள் ஆயின. இந்நூலை மீண்டும் மறுபதிப்பு செய்ய வேண்டும் என்று கவிஞர் முருகுசுந்தரம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்நூலின் அருமையும் பெருமையும் கருதிப் பாரதிதாசன் பல்கலைக்கழக வெள்ளி விழாவினையொட்டி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்காட்டில் புறப்பட்ட பூங்காற்றான கவிஞர் முருகுசுந்தரம் கவியரங்கக் கவிதைகளிலும் தடம் பதித்தவர். தமிழகத்தில் பல்வேறு கவியரங்குகளில் கலந்து கொண்டு கவிதைகளைப் பாடியுள்ளார். நளினமும் நையாண்டியும் நகைச்சுவையும் இவரது கவிதைகளில் கலந்திருக்கும். கவிஞர் முருகுசுந்தரத்தின் சமகாலக் கவிஞர்கள் சுரதா, அப்துல் ரகுமான், வாணிதாசன், முடியரசன், தமிழன்பன், சிற்பி, புவியரசு, சேலம் தமிழ்நாடன் ஆகியோர் ஆவார். கவிஞர் முருகுசுந்தரம் ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை மிக்கவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். பாரதிதாசன் கவிதைகள் உட்பட தமிழ்க் கவிதைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் எனும் நூல் இதற்கு எடுத்துக்காட்டாகும். இவரது மொழிபெயர்ப்பாற்றலைக் கண்டு வியந்த பாரதிதாசன் "நான்செய்த தமிழ்ப்பாட்டை நல்லதோர் ஆங்கிலத்தில் தான்செய் தளிக்கும் தகுதியிலே - வான்போன்றான்