பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தள்-ஒரு царвараoвараньM - 121 கொள்கையை மாற்றி, அதற்கு அரசியல் திருப்பங் கொடுத்துத் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்திய பெருமை இந்தத் திருமணத்துக்குண்டு. இந்தத் திருமணத்தின் பின்விளைவுகள் எப்படியிருந்தாலும், திருமணம் நடந்த நேரத்தில் இது பெரிய-சர்ச்சைக்கும் கொள்கைப் போருக்கும் காரணமாக இருந்தது. கழக இதழ்களான விடுதலையும் திராவிடநாடும் எதிரெதிர் பாசறைகளாக மாறின. கழக அறிஞர்கள் இரண்டு பக்கமும் அணிவகுத்து நின்று கொள்கைப் போர் நடத்தினர். அப்போர் சுவையானதாகவும், அறிவுக்குப் பெரிய விருந்தாகவும் இருந்தது. உலகத்தில் நடைபெற்ற இலட்சியத் திருமணங்களும், அவைகட்கு மறுப்புகளும் நாள்தோறும் சட்ட துணுக்கங்களோடு வெளியாகிக் கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் கண்ணிர்த் துளிகள் பற்றிய பேச்சாகவே இருந்தது. அறிஞர் அண்ணாவும் கைவல்யம் அவர்களும் எதிரெதிர் நின்று எழுத்துப் போர் நடத்திக் கொண்டிருந்தனர். “ஏழெட்டு ஆண்டுகள் பலர் முன்னிலையில் பழகி, சமைத்து உணவிட்டு, எழுத்தராகவும், செயலாளராகவும் பணிபுரிந்த முப்பது வயதான ஒரு பெண், தான் மணக்கும் ஒருவரைப் பற்றித் தெரியாமலா திருமணம் செய்து கொள்வாள்?” என்று கேட்டார் கைவல்யம். "பெரியாரின் தேவைகளைக் கவனித்துக் கொள்ள நானில்லையா? மிராந்தா இல்லையா? இதற்கு ஒரு மணியம்மை தேவையா?” என்று அண்ணா கேள்விக் கணை தொடுத்தார். அதற்குக் கைவல்யம், நீங்கள் இருக்கலாம். ஆனால் பெரியாரின் தினவறிந்து சொறிந்துவிட உங்களால் ஆகுமா?" என்று கேட்டார். இக்கருத்துப் போராட்டத்தில் பாவேந்தரும் உணர்ச்சி வசப்பட்டுச் சில அறிக்கைகள் வெளியிட்டுவிட்டுப் பின்னர் ஒதுங்கிக் கொண்டார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்ப்பு அணியிலே பிறகு வாழ்நாள் பூராவும் இருந்து வந்தார். தாம் இவ்வளவு நாளாகப் பேசியும் எழுதியும் பரப்பி வந்த சீர்திருத்தக் கொள்கைக்கு மாறாகத் தந்தை பெரியார் திருமணம் செய்துகொண்ட நிகழ்ச்சி பாவேந்தரின் இந்தப் பாடலுக்கு உந்துதலாக அமைந்தது. அண்ணா, கைவல்யம் ஆகியோரின் எழுத்துப் போர் அப்படியே இப்பாடலில் இடம் பெற்று விட்டது.