பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-இருபல்கலைக்கழகம் 13] சாமி கும்புடுவாயா? இல்லை! சாப்பிட்டாயா? இல்லை! போய் முதல்ல சாப்பிடு. இதுதான் முதன் முதலில் பாவேந்தருக்கும் எனக்கும் நடந்த உரையாடல். சாப்பிட்டு முடித்துவிட்டு வந்தேன். மேல் பூச்சு இல்லாத என் பச்சையான பதில்கள் அவருக்கு மிகவும் பிடித்திருக்க வேண்டும். இரக்க உணர்வுடன் என்னைப் பார்த்தார். என்னை அருகில் அழைத்து, "கலப்பு மணம் இருக்கட்டும். முதல்லே இதை (அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணைக் காட்டி) ஊரில் கொண்டு போய் விட்டுட்டு வந்துடு. உன்னை நான் வேலைக்கு வெச்சுக்கறேன். கலப்பு மணம் அப்புறம்!..... என்ன?" என்று சொன்னார். வழிச் செலவுக்குப் பணமும் கொடுத்தார். நான் அப்பெண்ணை ஊரில் கொண்டுபோய் விட்டுவிட்டு மீண்டும் புதுவை வந்து சேர்த்தேன். பாவேந்தரைச் சந்தித்த முதல்நாள் அச்சகத்திலிருந்து அவருடைய கவிதை ஒன்றின் திருத்தப்படி (Proof) வந்திருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தேன். மார்கழியின் உச்சியில் வருக தைப்பொங்கல் நாள்-- என்று தொடங்கிய கவிதைவரி என் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தது. மார்கழித் திங்கள் முடிந்துவிட்ட செய்தியைக் குறிப்பிடுவதற்கு அவர் கையாண்ட மார்கழியின் உச்சி என்ற சொல்லாட்சி எனக்கு மிகவும் புதுமையாகத் தென்பட்டது. நான் ஊருக்குச் சென்று மீண்டும் திரும்பி வந்து பாவேந்தரைச் சந்தித்தபோது எனக்கு ஒரு வேலை தரச் சொல்லிப் புதுவைத் துறைமுக அதிகாரி ஒருவருக்குப் பரிந்துரைக் கடிதம் கொடுத்தார். நான் அதை எடுத்துக் கொண்டு துறைமுக அலுவலகம் நோக்கிச் சென்றேன். ஆனால் துறைமுகப் பகுதியை நெருங்குவதற்கு முன்பாகவே ஆபத்து என்னை வலை போட்டுத் தேடிக் கொண்டிருப்பதை அறிந்தேன். எந்தப் பெண்ணை நான் புதுவை