பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 மார்கழியின் உச்சியில். அழைத்து வந்தேனோ, அந்தப் பெண்ணைச் சேர்ந்த சிலர் அங்கு கழுகுப் பார்வையோடு காத்துக் கொண்டிருந்தனர். நான் ஏன் துறைமுகத்துக்குள் நுழையப் போகிறேன்? பந்தைப்போல் வந்த சுவடு தெரியாமல் பாவேந்தர் வீட்டுக்கே திருப்பி விட்டேன். பாவேந்தரிடம் வந்து நடந்ததைச் சொன்னேன் சரி, சொல்றதைக் கேட்டுக்கிட்டு இங்கேயே இருந்திடு!’ என்றார். நானும் சரியென்றேன். மாதம் இருபது ரூபாய் சம்பளம். அப்போது பாவேந்தரின் மூத்தபெண் சரசுவதி சடங்காகி வீட்டிலே இருந் தார்கள். கோபதி பள்ளி மாணவன். நான் கோபதியைப் பள்ளிக்கு இட்டுச் செல்வேன். வீட்டுக்குக் காய்கறி வாங்கி வருவேன். பாவேந்தரின் முன்கோபத்துக்கு அஞ்சி, யாரும் அதிக நாள் அவரிடம் வேலைக்கு இருக்க மாட்டார்கள். நான் அடக்கமாகவும், அமைதி யாகவும், நல்ல முறையிலும் அவரிடம் நடந்து கொண்டேன். என் கையெழுத்து அவருக்கு மிகவும் பிடிக்கும். பாண்டியன் பரிசை மூன்று முறை நான் படியெடுத்துக் கொடுத்தேன். பாவேந்தர் தாம் எழுதும் பாடல்களுக்கு முதலிலேயே தலைப்புக் கொடுக்கும் வழக்கமில்லை. அவர் எழுதிப் போட்ட பாடல்களைக் கையில் எடுத்து, "இப்பாட்டுக்கு என்ன தலைப்பு? என்று அவரைக் கேட்டால், நீயே ஒரு தலைப்பு வையேன்!” என்பார். காதல் நினைவுகள் தொகுதியில் உள்ள ஒரே குறை என்ற தலைப்பு பொன்னி ஆசிரியர் முருகுசுப்பிரமணியம் வைத்த தலைப்பு. குடும்ப விளக்கு நான் சொன்ன தலைப்பாகும். வளர்ந்து புகழேணியின் உச்சியில் இருக்கும் சிலர் வளரும் நிலையில் இருப்பவரை ஊக்குவிப்பது மிக அருமை. ஆனால் பாவேந்தர் அதற்கு நேர்மாறானவர். நான் எழுதிய கவிதைகள் சிலவற்றை வேறொருவர் பெயர் போட்டு முதலில் அவரிடம் காட்டினேன். அவற்றைப் படித்துவிட்டு நல்லாருக்கு... பக்குவப்பட்டவன் எழுதற கவிதை போல இருக்கு என்று சொன்னார். அப்பாராட்டு எனக்கு ஒரு ‘டானிக் மாதிரி இருந்தது. அப்பாடல்களை எழுதியவன் நான்தான் என்பதை அறிந்த பிறகு, விடாதே! எழுது! ஆறுமுக நாவலரை விட உனக்கு ஆற்றல் அதிகம் இருக்கு!’ என்று பாராட்டினார். என்னை ஏன் அவ்வாறு அவர் பாராட்டினார் என்று எனக்கு அப்போது விளங்கவில்லை. பாரதிதாசன் என்ற புனைப் பெயரைத் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த சில நண்பர்கள் கேலி செய்வது வழக்கம். அவர்களுள் பட்டுக்கோட்டை அழகிரிசாமி குறிப்பிடத்தக்கவர். பாரதி ஒரு