பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 மார்கழியின் உச்சியில். அவருக்குப் பொருத்தம் தான் என்று பாராட்டினர். பின்னர் ஞானமணி பாட, பயிற்சி பெற்ற சில பெண்கள் நாட்டியம் ஆடுவர். இறுதியில் புரட்சிக்கவி நாடகம் நடைபெறும். நான் அந்த நாடகத்தில் அமைச்சனாக நடித்தேன். காடைக்காரக் குறவனாக வேடமிட்டு நான் மேடையில் ஆடுவதும் உண்டு. புரட்சிக்கவி' காப்பியத்தை மேடைக்கு ஏற்ற முறையில் பாவேந்தர் அழகாக மாற்றி எழுதியிருந்தார். கவிஞன் உதாரன் அமுதவல்லிக்கு இலக்கணப் பாடம் சொல்லிக் கொடுக்கும் காட்சியை மிக எளிமையாகவும், சுவையாகவும், புரியும்படியும் எழுதியிருந்தார். அந்நாடகத்தில் பளிச்சிட்ட சில கவிதை வரிகள் என் நெஞ்சத்தில் இன்றும் இனித்துக் கொண்டிருக்கின்றன. களவுப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்த அரசிளங்குமரி அமுதவல்லி ஒரு நாள் தோட்டத்திலிருந்து அரண்மனை திரும்புகிறாள். அவள் தோற்றத்தைக் கண்ட தோழியர் ஐயம் கொள்கின்றனர். அந்த ஐயத்தை அழகிய உவமை நயத்தோடு அந்தத் தோழியர் வெளிப்படுத்துகிறார்கள். மிக நயமான கற்பனை: ஒடம் கவிழ்ந்துபின் உருப் பெற்றாலும் புறத்தும் உள்ளும் புனல்நனைந் திருக்கும். தெருக்குள் உலவும் சித்திரத் தேர்உன் உருக் குலைந்ததேன்? உள்ளதைக் கூறு. நான் வாழ்க்கையில் சந்தித்த பலருள் பாவேந்தர் மிகப் பெருமிதமான தோற்றமுடையவர். உண்பது, உடுப்பது, உரையாடுவது, நடப்பது யாவற்றிலும் ஒரு பெருமிதம் தென்படும். எவ்வளவு பெரிய நிலையில் இருப்பவர்களும் பாவேந்தர் முன் வரும்போது, அவர்களையும் அறியாமல் அவர்கள் உள்ளத்தில் ஒருவித அச்சங்கலந்த மரியாதை தோன்றுவதை நான் பார்த்திருக்கிறேன். பேரறிஞர் அண்ணா, பெரியாருக்கு அடுத்தாற்போல் இந்த நூற்றாண்டுத் தமிழர்களால் மதிக்கப்பட்ட பெரிய மனிதர். அவரே பாவேந்தர் முன்னால் வரும் போது உட்காரமாட்டார். "அண்ணாத்துரை! ஏ நிக்கற? உக்காரு!’ என்று பாவேந்தர் சொல்லுவார். ஆனால் அண்ணா உட்காரமாட்டார். பாவேந்தரின் எழுத்து அண்ணாவின் துவக்கக் கால வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தது. பாவேந்தர் இயல்பாகவே பரந்த உள்ளம் உடையவர். யார் வந்து வாழ்த்துக் கவிதை, பாராட்டுக் கவிதை கேட்டாலும் முகங் கோணாமல் எழுதிக் கொடுப்பார். தன்னைத் தேடி வருபவர்க்