பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 135 கெல்லாம் சோறு போடுவார். பழகியவர் எவ்வளவு தாழ்ந்தவராக இருந்தாலும், கொஞ்சம் கூடப் பெருமை பாராட்டாமல் உதவி செய்வார். வசதியற்ற நண்பர் யாராவது கூட்டத்துக்கு அழைக்க வந்தால், "நீயேன் கைக்காசைசெலவு பண்ற? நாந்தா இத்தனாந்தேதி வேறோரு விஷயமா அங்கவர்ரனே! அப்பப் பாத்து வைச்சுக்க, என்று உரிமையோடு கூறுவார். தமது கவிதை ஆற்றலில் பாவேந்தருக்கு அளவு கடந்த நம்பிக்கை உண்டு. எந்தச் செய்தியை எப்படிச் சொன்னால் படிப்பவர் மனதில் உடனே படியும் என்பதை நுட்பமாக உணர்ந்து பாடுவதில் அவருக்கு நிகர் அவரே! “இதோ பார்! இதைப் படிச்சான்னா அப்படியே உள்ளத்திலே உட்காரும்!’ என்று சொல்லிவிட்டுக் கவிதை எழுதுவார். அவ்வளவு தன்னம்பிக்கை. எவ்வளவு புகழ் பெற்றவரானாலும் தகுதியில்லாதவர் வளர்ச்சியைப் பாவேந்தர் மதிப்பதில்லை. பிழையாக எழுதிப் பாவேந்தரின் பாராட்டைப் பெறுவது என்பது முடியாத காரியம். முன்னுரை வேண்டி வந்த சிலரைப் பார்த்து, 'உன்னையெல்லாம் கவிதை எழுதலைன்னு எவங்கேட்டா? போ போ! வந்துட்டானுக! என்று திட்டி அனுப்புவார். இறைவன் மீது பாடும் துதிப்பாடல்களைத்தான் மக்கள் பாராயணம் செய்வது வழக்கம். பக்திப் பாடலைப் போல் பாவேந்தரின் பாடலையும் பாராயணம் செய்ய இந்த நாட்டில் ஒரு பெருங் கூட்டமே உண்டு. பாவேந்தர் பாடலைப் படித்தேன்’ என்று சொல்லிக் கொள்வதைக் கேவலமாக எண்ணிய தமிழ்ப் பேராசிரியர்களை எனக்குத் தெரியும். இன்று பாவேந்தர் பாடலை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறப் பல பேராசிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்வருகின்றனர் இந்த நாட்டிலே பாவேந்தருக்குக் கடற்கரையில் சிலையெடுக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் வெளியிட்டவன் நான்தான். பேரறிஞர் அண்ணா அதை நிறைவேற்றினார். பாவேந்தரின் தொடக்கநாள் கவிதைகள் மிகவும் கரடு முரடானவை. எழுத்தசை எண்ணிப்பாடும் வண்ணப் பாடல்களையும் சந்த விருத்தங்களையும் தம்முடைய இருபதாம் வயதுக்கு முன்பே பாவேந்தர் எழுதிக் குவித்தவர். எவ்வளவுக்கவ்வளவு புரியாத 1) சிலை வைப்போம் என்ற கவிதை 22.4.55 முரசொலி இதழில் என்னால் எழுதப்பட்டது.