பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 137 பாவேந்தர் ஒருவர் தாம் பாரதியின் பரம்பரை. ஆனால் பாவேந்தருக்குப் பின் ஒரு பெருங்கூட்டமே உண்டு. பாரதியை விடப் பாவேந்தர், தமிழை முறையாகப் பயின்றவர்; அழுத்தமான புலமையுடையவர். தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் பெயர்த்து வெளியிடுவதற்கு ஒரு தனித்துறையைத் தமிழக அரசு நிறுவவேண்டும். படைப்பாற்றலும், பன்மொழிப் பயிற்சியும் மிக்கவர்களைக் கொண்டு பாவேந்தர் கவிதைகளை மொழிபெயர்த்து உலகில் பரப்ப வேண்டும். அதுதான் பாவேந்தருக்கு நாம் ஆற்ற வேண்டிய நன்றிக் கடன்.