பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர் o - - 155 பிடிக்காதுங்க. நான் சைவ உணவுக்காரன் என்று கொஞ்சம் பெருமிதத்துடன் கூறினார். வந்தது கோபம் கவிஞருக்கு! "ஓஹோ. அப்படியா! அதனால்தான் நீ இப்படிக் கொத்தவரை வற்றல் போல் இருக்கிறாய்! சைவ சாப்பாட்டுக்காரர்களுக்கு நாம் எதிர்பார்க்கும் அளவு உடலில் வலுவும், உள்ள(மன) உறுதியும் இருக்காது. இப்பொ... இந்தியாவுக்கு வினை வந்ததே உன்னைப்போன்ற சைவ சாப்பாட்டுக்காரர்களால்தான்” என்று ஒரு போடு போட்டார் கவிஞர். அங்கிருந்த அனைவருக்கும் ஒரே திகைப்பாகிப் போய் விட்டது. எனக்குந்தான்! ஏனென்றால் நானும் ஒரு நோஞ்சான். கொத்தவரங்காய் உடம்புக்காரரோ இக்கட்டான இரண்டுங் கெட்டான் நிலையில் ஹி..ஹி...' என்று சிரிப்பதுபோல் காட்டிக் கொண்டார். அவர் முகத்தில் அசடே வழிந்தது. கவிஞர் தொடர்ந்தார்: "நம்மை உதைக்கிறேன் பார் என்று சொல்லிப் படையெடுக்குந் துணிவு சீனக்காரனுக்கு எப்படி வந்தது தெரியுமா? இந்தியாவில் பாதிப்பேருக்கு மேல் சைவ சாப்பாட்டுக்காரர்கள். அவர்களிடம் வீரமே இருக்காது என்று நினைத்துத்தான் சீனாக்காரன் துணிந்து நம் எல்லைக்குள் கால் வைத்தான். வந்த வேகத்தில் இரண்டு மூன்று இடங்களையும் பிடித்துக் கொண்டான். நம் படை சிறிது பின் வாங்கியது கூட உன்னைப் போன்ற பருப்புச் சாம்பார்க்காரர் பலர் பட்டாளத்தில் இருப்பதால்தான். சாம்பார்க் கூட்டத்தின் தொகை பெருகினால் சீனாக்காரன் கன்னியாகுமரி வரை வந்தாலும் வியப்படைவதற்கில்லை" உணர்ச்சி வசப்பட்டுக் கவிஞர் பேசிக் கொண்டிருந்தார்: ஸ்பென்சர் தயாரிப்பான, விரல்களுக்கு அடங்காத சர்ச்சில் சுருட்டு அவர் வாயில் புகைந்து கொண்டிருந்தது. மேலும் தொடர்ந்தார்: "நம் பரம்பரை வீரம் இந்தக் காலத்து இளைஞரிடம் இல்லை; வர வரக் குறைந்து கொண்டே வருகிறது. எல்லைப்போர் எக்காலத்தும் வரும், அதற்காக உயிர் கொடுத்துப் போரிட வீரர்நாட்டிற்கு என்றும் தேவை. எனவே, உயிரினங்கள் உயிரோடு அறுக்கப்பட்டு, வெட்டப் பட்டு, அவை இரத்தம் சொட்டச் சொட்டத் துடிக்கும் காட்சியைச் சிறு வயதிலிருந்தே நம் குழந்தைகளுக்குக் காட்டிப் பழக்க வேண்டும். இந்தக் காலத்து இளைஞர் சிரங்கிலிருந்து சீழ் வடிந்தால் கூட ஓவென்று நடுங்கி மயக்கம் போட்டு விழுந்து விடுகின்றனர்."