பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் - * 16] வேணு (எ) சுப்பராய முதலியார் எங்கள் பெரியப்பா. அவருக்கு மளிகைமண்டி வாணிகம் தொழில்; சோதிடம் துணைத்தொழில். மணிக்கணக்குச் சோதிடம் சொல்வதிலும், கோசாரபலன் கூறுவதிலும் வல்லவர். புதுவைப் பிரமுகர்களான திருவாளர்கள் ஞாந்திய முதலியார், சின்னையா முதலியார் ஆகியோர்க்கு இவர் குடும்பச் சோதிடர். இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட்டில் அவர்கள் வீட்டுக்குச் சென்று சோதிடம் சொல்லிவிட்டுத் திரும்புவார். என் தந்தையார்க்குச் சோதிடமெல்லாம் பிடிக்காது. என் பெரியப்பாவைப் பற்றி அவர் நகைச்சுவையாக அடிக்கடி ஒரு செய்தியைக் குறிப்பிடுவதுண்டு. பெரியப்பாவும் என் தந்தையாரும் சிறுவர்களாக இருந்தபோது நடந்தது இந்நிகழ்ச்சி. ஒருமுறை என் பெரியப்பா ஒரு பெட்டியின் மீது அமர்ந்தபோது பெட்டிச் சந்தில் அவரது கை சிக்கிக் கொண்டதாம்; வலி பொறுக்க முடியாமல் முருகா! முருகா! என்று கதறினாராம். அருகிலே நின்று கொண்டிருந்த எங்கள் தாத்தா 'எந்திரிடா மடையா? முருகன் என்னடா செய்வான்? என்று சொன்னாராம். இதை என்தந்தையார் கூறும்போதெல்லாம் நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்போம். புதுவைக் கல்வே கல்லூரியின் எதிரில் மயிலம் சுப்பிரமணிய மடத்தார் ஒரு திண்ணைப்பள்ளிக்கூடம் நடத்தி வந்தனர். அத்திண்ணைப் பள்ளியில்தான் என் தந்தையார் தொடக்கக் கல்வி பயின்றார். திருவாளர் திருப்புளிசாமி ஐயா அப்பள்ளியின் ஆசிரியர். கல்வே கல்லூரியில் முதல் வகுப்பிலிருந்து பி.ஏ.பட்ட வகுப்பு வரை கற்று கொடுக்கின்றனர். தமிழகத்துக் கல்லூரிகளில் ஆங்கிலத்துக்கு உள்ள சிறப்பிடம் அங்கு பிரெஞ்சு மொழிக்குண்டு. தமிழ்ப் புலவர்களுக்கென்று புதுவை அரசாங்கம் அந்நாளில் பிரவே தமிழ்' என்று ஒரு தேர்வு நடத்தி வந்தது. கல்வே கல்லூரியில் ஈராண்டு பயின்று அத்தேர்வு எழுதவேண்டும். என் தந்தையாரும் அக்கல் லூரியில் பயின்று அத்தேர்வு எழுதி முதல்வராக வெற்றி பெற்றார். கல்வே கல்லூரியில் இவர் படித்துக் கொண்டிருந்த காலத்தில் புலவர் பங்காரு பத்தர் இவருக்குத் தமிழ் பயிற்றும் பேராசிரியராக விளங்கினார். ஒய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியரான சாரம் மகா வித்துவான் பு.ஆ. பெரியசாமி பிள்ளையிடம் இலக்கிய இலக் கணத்தோடு வேதாந்த சித்தாந்தக் கருத்துக்களையும் பயின்றார். என் தந்தையாருக்குத் திருமணம் உறுதி செய்யப்பட்டவுடன் புதுவை அரசு அவர் மீது ஒரு பொய் வழக்குப் போட்டுச் சிறையில்