பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 167 மருத்துவமனையில் படுத்துக் கொண்டு அங்கேயே கவிதை எழுதிப் போடுவார். நாங்கள் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வருவோம். பிரெஞ்சு நாட்டில் விழிமலை என்றோர் இடமுண்டு. அம்மலை அந்நாட்டு மக்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. அம்மலையின் ஊற்றுநீர் மருந்துத் தன்மை வாய்ந்ததென்றும், அந்நீரை அருந்திய நோயாளிகள் நோய் நீங்கப் பெறுவர் என்றும் பிரெஞ்சு மக்கள் நம்புகின்றனர். அந்தக் காலத்தில் அந்நீரைப் புட்டிகளில் அடைத்துப் புதுவைக்குக் கொண்டுவந்து மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளுக்குக் கொடுப்பர், நோயாளிகள் அதை விரும்பி அருந்துவர்; ஆனால் என் தந்தையார் அதைக் கைகழுவப் பயன்படுத்துவார். நான் பள்ளி இறுதி வகுப்பு (S.S.I.C) வரைதான் படித்தேன். அதற்கு மேல் என் கல்வியைத் தொடர என் வீட்டுச் சூழ்நிலை இடந்தரவில்லை. நான் மேற்படிப்புக்குச் சென்றிருந்தால் என் தந்தையாரின் எழுத்துப்பணி குறைந்திருக்கும். என் இளமைக்கால வாழ்க்கையின் பெரும்பகுதி என் தந்தையாரின் மனங்கோணாமல் அவரைப் பேணுவதிலேயே கழிந்தது. நான் எப்போதும் அப்பா பெண். அவர் உள்ளமறிந்து நடந்து கொள்வதில் கண்ணுங்கருத்துமாக இருப்பேன். ஒர் ஆசிரியர் இரவில் வீட்டுக்கு வந்து எனக்குத் தனிப்படிப்புச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் எனக்குப் பாடம் நடத்திக் கொண் டிருக்கும்போது பாப்பா! பாப்பா என்று அறைக்குள்ளிருந்து என் தந்தையார் கூப்பிட்டுக் கொண்டிருப்பார். அவர் தேவைகளைக் கவனித்துக் கொண்டே கல்வி கற்பது எனக்கு மிகவும் கடினமாகத்தான் இருந்தது. இரவு பதினொரு மணிக்கு அவர் தூங்கிய பிறகு வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, வீட்டுப் பாடங்களைப் படித்து முடிப்பேன். இரவு எந்நேரம் படுத்தாலும் அதிகாலையில் எழுந்துவிட்டு வேலைகளைத் தொடங்கிவிடுவேன். குடும்பவிளக்கு நூல் முதல் பகுதி 1942 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டுக் குடும்பப் பணிகளை நான்கைந்து ஆண்டுகள் நான் செம்மையாகச் செய்து கொண்டிருந்த நேரம் அது. என்னைப் பார்த்துத்தான் குடும்ப விளக்கின் தலைவிக்கு உருவம் கொடுத்ததாக என் தந்தையார் அடிக்கடி கூறுவதுண்டு. கொஞ்சநாள் நான் இசையும் கற்றுக்கொண்டேன். சேலத்திலிருந்து ஒர் இசையாசிரியர் வந்து எனக்குக் கற்றுக் கொடுத்தார். இசையில் என் தந்தையாருக்கு ஈடுபாடு அதிகம் என்றாலும், எப்போது