பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 என்தந்தையார் பார்த்தாலும் சரிகமபதநி’ என்று கத்திக் கொண்டிருப்பது அவருக்குப் பிடிக்காது. யார்ரா அவ?... எப்பப் பார்த்தாலும் சரிகம பதநின்னுக்கிட்டு. அவனை மொதல்ல வெளிய போகச் சொல்லு...' என்று சத்தம் போடுவார். நானும் என் தம்பி கோபதியும் பள்ளி மாணவர்களாக இருந்தபோது, எங்களுக்கென்றே சில பாடல்களை எழுதிக் கவிதா மண்டலம்' பத்திரிகையிலே வெளியிட்டார். கல்வியின்மிக்கதாம் நிற்கையில் நிமிர்ந்துநில் சேரிடம் அறிந்துசேர் மரங்கள் அடர்ந்திருக்கும் காடு' என்ற பாடல்கள் அப்போது எழுதப்பட்டவை. நெட்டப்பாக்கம் பள்ளியில் நாங்கள் படித்துக் கொண்டிருந்த போது பள்ளி விழாவில் நடிப்பதற்காக எழுதப்பட்டதே வீரத்தாய் என்ற கவிதை நாடகம். அதில் நான் வீரத்தாயாக நடித்தேன். கோபதி சுதர்மனாக நடித்தான். 21.1.44இல் எனக்கும் புலவர் கண்ணப்பனாருக்கும் திருச்சிராப்பள்ளியில் பதிவுத் திருமணம் நடைபெற்றது. 22.1.44 ஆம் நாள் காலை ஒன்பது மணிக்குப் பெரியார் முன்னிலையில் பாராட்டுக் கூட்டம் கட்டிப்பாளையத்தில் நடைபெற்றது. என் திருமணம் நடைபெறப் பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டு உறுதுணையாக இருந்தவர்கள் கானாடுகாத்தான் தனவணிகர் திரு.வை.சு. சண்முகம் செட்டியாரும், அவரது துணைவியாரான மஞ்சுளாபாய் அம்மையாரும் ஆவர். மஞ்சுளாபாய் அம்மையார் எங்கள் குடும்பத்தின்பால் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவரை எங்கள் குடும்பத்தின் ஓர் அங்கமாக்கி அத்தை என்று அன்போடு அழைப்பது வழக்கம். எப்போதும் அரசியலிலும் கவிதையிலும் மூழ்கிக் கிடப்பவர் என் தந்தையார். அவர் உலகமே வேறு; உலகியலுக்கு இறங்கிவந்து செயல்படுவது அவருக்குச் சற்றுத் தொல்லையாகத் தான் இருக்கும். அதுபோன்ற வேளைகளில் மஞ்சுளாபாய் போன்ற நல்ல உள்ளம் படைத்த அன்பர்கள் தாமே முன்வந்து உதவுவது வழக்கம். திருமதி மஞ்சுளாபாய் அவர்களே மாப்பிள்ளை பார்த்து விட்டுத் திடீரென்று ஒருநாள் புதுச்சேரி வந்தார். அவரே ஒட்டடை அடித்து வீட்டைத் துய்மை செய்தார்; பால் வாங்கிக் கொண்டு வந்தார். பெண்பார்க்கும் படலத்தை உடனிருந்து நடத்தினார். திருமணத்தைப் பற்றி முதன் முறையாக என்னிடம் கேட்டபோது, "அப்பாவைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது; அவரைத் தொடர்ந்து செல்வதில்தான் எனக்கு விருப்பம். அப்பாவைக் கேளுங்கள். அவர் விருப்பம் எதுவோ அதுதான் என் விருப்பம்" என்று நான் சொன்னேன்.