பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 என்தந்தையார் உருக்கும் வரிகள், இந்த வரிகள்! திருமணம் என்ற புயல், எனது உயிரைப் புதுவையிலும் உடலைக் கட்டிப்பாளையத்திலும் ஒதுக்கி விட்டதாக அப்போது நான் எண்ணி வருந்தினேன். என் உள்ள(மன) நிலையை உணர்ந்த என் கணவரும் உடனே விடுப்பெடுத்துக் கொண்டு என்னோடு புதுவை புறப்பட்டார். நான் புதுவைக்கு இந்த நாளில் வருகிறேன் என்று முன்னதாகவே கடிதம் போட்டுவிட்டுச் செல்வது வழக்கம். என் வரவை எதிர்நோக்கி அவர் எப்போதும் திண்ணையிலேயே அமர்ந் திருப்பார். பெருமாள் கோவில் தெருமுனையில் என்னைப் பார்த்ததும் வீட்டுக்குள்ளிருக்கும் என் தாயாரை விளித்து, "பழனியம்மா குடும்ப விளக்கு வருது” என்று கூறுவார். என் கணவர் புதுவைக்கு வரும்போதெல்லாம் என் தந்தையாரே கடைக்குச் சென்று மீன் வாங்கிக் கொண்டு வருவார். என் தலைப்பிள்ளையான புகழேந்தி புதுவையில் பிறந்தபோது, பிரெஞ்சு நாட்டிலிருந்து இறக்குமதியான சாக்லெட்டைப் பார்க்க வருபவர்களுக்கெல்லாம் குத்துக் குத்தாக வாரி வழங்கினார். பேரன் புகழேந்தி மீது அவருக்கு அளவு கடந்த விருப்பம். தமக்கு உடம்பு சரியில்லையென்றால் தந்தி கொடுப்பார். நான் குழந்தையோடு புறப்பட்டுச் செல்வேன். புகழேந்தியைப் பார்த்ததும் அவருக்கு உடம்பு குணமாகிவிடும். என் தந்தையாருக்கு உள்ளமும் நாக்கும் ஒன்றுதான். உள்ளத்தில் என்ன நினைக்கிறாரோ அதை எதிர்ப்புகளுக்கஞ்சாமல், பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் பேசிவிடுவார்; எழுதிவிடுவார். அதனால் அரசியல் உலகிலும், இலக்கிய உலகிலும் அவருக்கு எதிரிகள் அதிகம். எதிர்ப்பு அதிகம் ஆக ஆக அவருக்குச் சுறுசுறுப்பு அதிகமாகுமே தவிர சோர்வு ஏற்படாது. அவர் எந்த நிலையிலும் அச்சப்பட்டு நான் பார்த்ததில்லை. இந்தப் பண்புகளால் அவருக்கு ஏற்பட்ட தொல்லைகள் ஏராளம். கல்வித்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே இவரை அடிக்கடி இடம் மாற்றிக் கொண்டிருப்பார்கள். காரைக்கால், நிரவி, கூனிச்சம்பட்டு, நெட்டப்பாக்கம், முதலியார்பேட்டை ஆகிய வெளியூர்களுக்கும், புதுவையில் கல்வே கல்லூரி முதல் மற்ற முத்திரைப் பாளையம், உருளையன் பேட்டைப் பள்ளிகளுக்கும் அவரைப் பந்தாடிக் கொண்டிருப்பார்கள். அதற்காக என் தந்தையார் கலங்க மாட்டார்; தம் கொள்கைகளையும் விட்டுக் கொடுக்க மாட்டார். கல்லூரி வகுப்புகளுக்குப் பாடம் பயிற்றுவிக்கத்தக்க பெரும் புலமையும் ஆற்றலும் பெற்றிருந்தாலும் சிறுவர்களின் மீது கொண்ட