பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 முருகுசுந்தரம் கருத்துக்கும் வேறுபாடுகள் உண்டு. அரசியல் அடிப்படையில் இதையும் ஆய்வு செய்ய வேண்டும். சங்க காலம் தொட்டு இன்றுவரை மொழியையே பாடு பொருளாக (Theme) வைத்துப் பாட்டிலக்கியம் படைத்து அதில் வெற்றிகண்ட கவிஞர் பாவேந்தரைத் தவிர வேறு யாருமில்லை. மொழியை ஆற்றல்மிக்க பிரச்சார பீரங்கியாகப் பயன்படுத்தி வெற்றிகண்டவரும் இவரே! இவர் எழுப்பிய மொழியுணர்ச்சிதான் இன்றைய தமிழக அரசியலுக்கு உயிர்ச்சத்தாகவும் ஊட்டச் சத்தாகவும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. முதியோர் காதல் தமிழ் வரலாற்றில் பாரதிதாசன் மட்டுமே காலெடுத்து வைத்த புதிய துறை. பாவேந்தர் பாடல்களை மேடைதோறும் பாடியும், ஏடுதோறும் எழுதியும்தான் தன்மான இயக்கம் வளர்ந்தது; திராவிட இயக்கம் தமிழகத்தில் ஆட்சிப்பீடம் ஏறியது. தமிழ் மக்கள் உள்ளத்தில் சீர்திருத்தப் புரட்சியையும், தமிழக அரசியலில் ஆட்சி மாற்றத் தையும் ஏற்படுத்தும் ஆற்றல் இவரது வலிமையான எழுத்துக்கு இருந்தது. அழகிய சொல்லுக்கும், ஆணித்தரமான கருத்துக்கும் அறிஞர் அண்ணாவே இவரிடத்தில் கடன்பட்டிருக்கிறார். இவை யாவும் முறைப்படி ஆய்வு செய்தற்குரியவை. இலக்கிய ஆராய்ச்சி நடத்தும் என் இளைய தலைமுறையினரைக் காணும்போதெல்லாம், நான் அவர்களுக்கு இவற்றை அடிக்கடி நினைவூட்டுவதுண்டு, பாவேந்தரின் எழுதுகோல் தொடாத கருத்து எதுவுமில்லை; அவர் தொட்டு இலக்கிய மதிப்புப் பெறாத சிந்தனை எதுவுமில்லை. இன்றைய தமிழர்கள் எந்தக் கருத்துக்கு மேற்கோள் காட்டவேண்டுமென்றாலும், திருவள்ளுவரிடம் செல்ல வேண்டும்; அல்லது பாரதிதாசனைத் தேடி வர வேண்டும். திருவள்ளுவரிடம் காணப்படாத இன்றைய புதிய சிந்தனைகளுக்குப் பாவேந்தரை விட்டால் வேறு யாருமில்லை. பாவேந்தர் ஒரு தனிப்பட்ட கவிஞர் அல்லர்; அவர் கவிஞர்களின் அணிவகுப்பு. இந்நூல் என் 15 ஆண்டு முயற்சி. கவியரங்கம், சொற்பொழிவுகளுக்காக நான் எவ்வூர் சென்றாலும், அவ்வூரில் பாவேந்தரோடு பழகிய நண்பர் யாராவது இருக்கின்றாரா என்று அறிவது என் முதல் வேலை. அவ்வாறு யாரேனும் இருந்தால் அவருடைய இல்லம் சென்று பொறுமையாகக் காத்திருந்து அவர்