பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 பாடிப் பறந்த குயில் பெரும்பான்மை மக்களின் ஆதரவோடு மக்கள் முன்னணி என்ற கூட்டமைப்பு வெற்றி பெற்றது. பல்லாயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுக் கவிஞர் சட்டமன்ற உறுப்பின ரானார், மூத்த உறுப்பினர் என்ற முறையில் இவர் தலைமையில் தான் சட்டமன்ற முதல் கூட்டமே துவங்கப்பட்டது. அத்தேர்தலில் வெற்றி பெற்ற மற்றோர் உறுப்பினரும் நண்பருமான திருவாளர் உசேன் அவர்கள் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவ்விருந்துக்குக் கவிஞரும் அழைக்கப்பட்டிருந்தார். எல்லாம் தூய நெய்யால் சமைக்கப்பட்ட உயர்தரப் புலால் உணவுகள். கோழி ரோஸ்ட் பரிமாறப்பட்டது. கவிஞர் சுவைத்து உண்டு கொண்டிருந்தார். அளவுக்கு மீறி நெய் சேர்க்கப்பட்டிருந்ததால் கவிஞருக்கு உணவு தெவிட்டத் தொடங்கி விட்டது. விருந்து வைத்தவர் இதைப் பார்த்தார். அருகிலிருந்த ஊறுகாய்த் தட்டத்தைக் கவிஞர் அருகிலே நகர்த்தி வைத்து “முசியே! இந்த ஊறுகாயைக் கொஞ்சம் சாப்பிடுங்கள்; சரியாகிவிடும்!" என்றார். புளிப்புச் சுவையுள்ள ஊறுகாயைக் கவிஞர், சிறிது வாயில் எடுத்துப் போட்டுக் கொண்டார். சில வினாடிகள் கழித்து மீண்டும் கவிஞர் கோழியைச் சுவைக்கத் தொடங்கினார். திரு. உசேன் இதை மிக மகிழ்ச்சியோடு கண்டு களித்துக் கொண்டிருந்தார். கவிஞர் திடீரென்று, "அட! கோழியை ஊறுகாய் வாழ வைத்து விட்டதே!” என்றார். கவிஞர் சொன்ன கருத்தின் பொருள் விளங்காமல் விழித்தார் விருந்து வைத்த நண்பர். பாவேந்தர் இயற்கையெய்திப் பல ஆண்டுகள் கழித்து 25.4.68 இல் புதுவையில் நடைபெற்ற பாவேந்தர் நினைவு விழாவில் திருவாளர் உசேன் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். அப்போது இவ்விருந்து நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து பின் கண்டவாறு கூறினார். "பாவேந்தர் கூறிய கருத்தின் பொருள் அன்று எனக்குப் புரியவில்லை. சுமார் பத்து ஆண்டுகள் கழித்து இப்போதுதான் புரிந்தது. செல்வர்கள் மட்டுமே உண்ணக்கூடிய நெய்யில் பொரித்த கோழிக்கறியைப் பெரும்பாலும் ஏழைகள் மட்டுமே உண்ணக்கூடிய ஊறுகாய் வாழ வைத்துவிட்டதே என்றால்-செல்வர்களை ஏழைகளே வாழ வைக்கிறார்கள் என்பது அதன் பொருள். இக்கருத்தை விளக்கவே பாவேந்தர் அவ்வாறு கூறினார். உண்ணும்போதும் உறங்கும் 1) முசியே என்பது monsieur என்ற பிரெஞ்சுச் சொல்லின் தமிழ் ஒலிப்பு. ஐயா என்பதே பொருள். -