பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 193 குணமும், எனக்கு நன்கு தெரியவந்தது. குயில் பத்திரிகை ஆரம்பிக்கும்போது அவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் கண்டிருந்தபடி நான் எனக்குத் தெரிந்தவர்களை யெல்லாம் குயில் இதழின் உறுப்பினர்களாகச் சேர்த்து உதவினேன். இன்னும் எனக்குத் தெரிந்த எத்தனையோ செய்திகளை நான் இந்தச் சுருங்கிய கட்டுரையில் தெரிவிப்பதற்கில்லை. அவர் படக்காட்சித் துறையில் இறங்காமலிருந்தால் நூறாண்டுகட்கு மேலும் வாழ்ந் திருக்கலாம். அவருடைய உடற்கட்டும், உள்ள(மன) உறுதியும் அத்தகையன. "நான் எந்தக் கட்சியினையும் சார்ந்தவனல்லன்” என்று அவர் தம்முடைய இறுதிக் காலத்திலேயே தெரிவித்திருந்தார். அவர் நம் தமிழ்நாட்டுக்காகவும், தமிழுக்காகவும் இதுவரையில் புரிந்துள்ள தொண்டுகளே என்றும் அழியாமல் நில்ைத்து நிற்கக் கூடியவனாக உள்ளன. தமிழ்நாட்டார் அனைவரும் அவருக்குக் கடமைப்பட்டவர்கள் ஆகின்றார்கள். தம் கருத்துக்களைப் படக்காட்சிகளின் மூலம் நம் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அவர் எண்ணியிருந்தார். படத்தொழிலில் ஈடுபட்டுள்ள பேரன்பர்கள் 'பாண்டியன் பரிசு' என்பதனைப் படமாக எடுக்க முன்வந்தால் அவருடைய இறுதிக்கால எண்ணத்தை நிறைவேற்றி வைத்தவர்களாவார்கள். அவர் சென்னையிலே கவிஞர் மாநாடு ஒன்றினைக் கூட்ட எண்ணியிருந்தார். இராசிபுரக் கவிஞர் அரங்கசாமி என்பவர் அதற்காகவே சென்னைக்கு வந்திருந்தார். தலைவர், திறப்பாளர், பேச்சாளர், மாநாடு நிகழ்த்த வேண்டியநாள் முதலிய பலவற்றையும் கவிஞர் அரங்கசாமி அவர்களைக் கொண்டு பாவேந்தர் முடிவு செய்து வைத்திருந்தார், அந்த மாநாட்டினை மாணவர் மன்ற நிலையத்திலேயே நடத்துவது என்றும் நம் பாவேந்தர் எண்ணி யிருந்தார். அந்த எண்ணம் நிறைவேறுவதற்குள் நம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். பாவேந்தருக்கு இறுதிமரியாதை புரிவதற்காக மாணவர் மன்றச் சார்பில் நான் சென்றிருந்தேன். அப்போது அவர் தம் அருந்தவச் செல்வராய மன்னர் மன்னன் என்னைக் கட்டிக் கொண்டு அழுதபோது என்னுள்ளம் பெரிதும் கரைந்துவிட்டது. அவருக்கு எத்தகைய ஆறுதலையும் கூற அப்போது என்னால் இயலவில்லை. மே மாதம் முதல் தேதியன்று இரங்கற் கூட்டம் ஒன்று கூட்டி எங்கள் துயரத்தை அங்கு வந்திருந்த மக்களுக்குத் தெரிவித்தோம். 1) 1.5.1964