பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 நினைவுத்துளிகள் கவிதைகள் முதற்றொகுதியையும் கொண்டு வந்து கொடுத்தார். அன்றுதான் நான் புரட்சிக் கவிஞர் பற்றித் தெரிந்து கொண்டேன். பின்னர் பள்ளியில் நடந்த போட்டிகளில் பங்கு பெற்றேன். அவற்றிற்கான பரிசுகளில் பாரதிதாசன் கவிதைகளையும் பரிசாகப் பெற்றேன். அவர் கவிதைகள் மிகப் புரட்சியுடையவனாக இருந்தன. அப்பருவத்தில் விளங்காத கவிதைகளும் அத்தொகுதியில் இருந்தன. திரு. உலகஉஊழியர் தந்த ஊக்கத்தால் நானப்போது கவிதை புனையவாரம்பித்தேன். நானெழுதிய சில பாடல்களைப் பார்த்துவிட்டு அவர் என்னம்மா புரட்சிக் கவிஞர் படித்ததின் விளைவு புலப்படுகின்றதே! என்பார். பின்னர் கல்லூரியில் சேர்ந்து படிக்கும்போதும் இவர் நூல்களைப் படிப்பதுண்டு. அந்நாட்களில் எனக்குப் பிடித்தமான வரிகள். இதய மெலாமன்பு நதியினில் நனைப்போம் இது என தென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம் என்பன, பட்டம் பெற்றபின் மதுரைக்கு வேலைக்கு வந்தேன். டோக்பெருமாட்டி கல்லூரியில் பணியாற்றத் தொடங்கிய பின் அவரை நான் நேரில் சந்தித்தேன். எங்கள் கல்லூரிக்கும் பலமுறை வந்திருக்கிறார். புரட்சிக்கவிஞர் கனல்கக்கும் சொற்களை முழக்கமிட்டுப் பேசுவாரென எதிர்பார்த்த எனக்கு அவர் குரல் புதிதாக இருந்தது. பேசுங்கால் அவர் கருத்துக்கள் புரட்சியானவை தாம். அவற்றை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் கூறுவார். ஆனால் மெல்ல, நகைச்சுவை ததும்பக் குரலை எடுத்தும் படுத்தும் கூறிக், கேட்பவர்க்கும் புத்தறிவூட்டுவார். எங்கள் வீட்டிற்கு அவர் 1955இல் முதன் முதலாக வந்தார். அதற்குப் பின்னர் பலதடவை வந்திருக்கிறார். அவரை விருந்திற்கழைக் குங்கால் அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளைக் கேட்டு அதன்படி சமைத்துத் தருவேன். ஒரு சமயம் அவர் தமக்குப் புறா சமைத்துத் தரச்சொன்னார். பல்லிற்கு வருத்தம் வராதிருக்க அதை அம்மியிலிட்டு அறைத்துச் சமைக்குமாறு கூறினார். பல்லிற்கு ஊறு வராமல் பக்குவம் செய்ய வேறுவகைகளுண்டென்று கூறி அதனை நன்கு மெதுவாகும்படி தயாரித்து மிளகிட்டுச் சமைத்துத் தந்தேன். மிகச் சுவையோடிருந்ததாகக் கூறி உண்டார். இரசம் (மிளகுச்சாறு) கூட அவருக்குக் கொஞ்சம் காரமாக இருக்க வேண்டும். அந்த முறையில் நான் அவருக்குச் செய்து கொடுத்திருக்கிறேன்.