பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 199 என்று சூதுவாதறியாமற் கூறினார். இதைக்கேட்ட என் கணவர் "ஐயா! உங்கள் வழக்கறிஞரைக் கலந்து கேட்காமல் இப்படித் திடீரென முடிவிற்கு வரல் சரியன்று. எனவே அவரைக் கலந்து முடிவிற்கு வாருங்கள்” என்று கூறினார்கள். யாவரையும் நம்பும் அத்தகைய வெள்ளையுள்ளம், குழந்தையுள்ளம் அவர்க்குண்டு. ஒருமுறை அவர் மதுரைக்கு வந்திருந்தபோது அவரது இசை யமுதைப் பற்றிப் பேசினோம். நானவரிடம் 'உங்களிசையமுதி லுள்ள பாடல்களுக்குச் சுரமமைத்தால் என்ன? என்றேன். 'இன்னபண் இன்னதாளம் என்றும் குறிப்பிடலாமல்லவா?" என்றேன். அதற்கவர் 'ஏனம்மா பாடுவோன் கற்பனைக்கு எல்லைகட்ட வேண்டும்? பாடுபவன் ஆற்றலுக்கேற்பப் பாடிப் பழகட்டும்” என்றார். இது அவரது பரந்த மனப்பாங்கிற்குச் சான்று. அவர் மேடையில் பேசுங்கால் புரட்சியும் புதுமையும் பேச்சில் பொங்கித்ததும்பும். சான்றாக, மதுரை தியாகராசர் கல்லூரியில் நான் பணியாற்றும்போது அவரங்கு பேசினார். அப்போது அவர் "லவனும் குசனும், இராமன் பகைவனான இராவணன் குழந்தைகள். அதனால் தான் அவர்கள் சிறுவரேயாயினும் இராமன் அனுப்பிய யாகக் குதிரையையும், இழுத்துக்கட்டி இராமனையும் எதிர்த்து வீழ்த்தினார்கள்" என்று கூறினார். கேட்டவர் வாயடைத்திருந்தனர். இது அவர் அஞ்சாமைக்குச் சான்று. இப்படி எவ்வளவோ கூறலாமவரைப் பற்றி, வஞ்சனையறியா உள்ளம் படைத்தவர். அவரது பண்புகளில் பல நானறிய வாய்ப்பில்லை. ஆனால் நானறிந்த மட்டும், அவர் ஒர் ஒப்பற்ற புரட்சிப் பாவேந்தர். இலக்கிய உலகில் அவர் எவ்வளவோ அறிந்தவர். ஆனால் உலகியலில் அவர் எவ்வளவோ அறியாதவர்; அறியக் கவலைப்படாதவர். அதனால்தான் உலகியலும் உலகும் அழியுமட்டும் அவர் தமிழர் உள்ளத்தில் வாழவிருக்கிறார்.