பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 205 ஒழிக்கப்படவேண்டும் என்று கருதுபவர்கள் கடவுள்களையும் கல்வியையுமே உள்விஷயமாகக கொண்ட கதை, காவியம், கலை, சங்கீதம், நாட்டியம், இலக்கண இலக்கியம் முதலியவற்றைக் கண்டிப்பாய் ஒழிக்க வேண்டும். - நம்முடைய இந்த இரண்டு வேலைக்கும் மேற்கண்ட இரண்டு கூட்டமும் தடையாகவே இருக்கும் என்பதோடு, நமக்குள் புகுந்துகொண்டே நம் முயற்சி வெற்றிபெறாமல் போகச் சூழ்ச்சி செய்வார்கள். - இதை நான் 26.11.28இல் சென்னையில் VP ஆலில் என் தலைமையில் கூட்டப்பட்ட சீர்திருத்த மகாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவில் தெளிவாய்ச் சொல்லி இருக்கிறேன். நம் கலைமகள், இலக்கணங்கள், இலக்கியங்கள் என்பவை இன்று நமக்குக் கேடாகவும், நம் இழிவுக்கும், மடமைக்கும், அடிமைத் தனத்துக்கும் ஆக்கமும் ஊக்கமும் தருவனவாகவும் இருப்பதற்குக் காரணம் அவை பார்ப்பனர்களாலும், மதவாதிகளாலும், இராஜாக்கள், செல்வவான்கள் ஆகியோர்களாலும் தோற்றுவிக்கப் பட்டவையும் கையாளப்பட்டவையுமேயாகும். மற்றும் இவர்களைப் பற்றிய விபரங்களையும், நாம் செய்ய வேண்டியவை களையும் ஒரு மாதத்திற்கு முன் குடி அரசில் நான் எழுதியிருப்பது போல் சமீபத்தில் கூட்டப்படப் போகும் முத்தமிழ் நுகர்வோர். அதாவது இசை நுகர்வோர், நடிப்பு நுகர்வோர், பத்திரிகை வாசிப்போர் ஆகியவர்கள் மகாநாட்டில் தெளிவுபடுத்த இருக்கிறேன். நீங்கள் ஆரம்பித்திருக்கும் இந்தக் காரியத்திற்கு, தமிழனிடத்தில் உண்மைப் பற்றும், தமிழும் தமிழர்களும் மேன்மை அடைய வேண்டும் என்ற உண்மைக் கவலையும் உள்ள ஒவ்வொரு சுத்தமான தமிழ் மகனும் ஆதரிக்கக் கடமைப்பட்டவனாவான். உங்களுக்கு நண்பர் பாரதிதாசன் அவர்கள் கிடைத்திருப்பது உங்கள் நல்வாய்ப்புக்கும் உங்கள் வெற்றிக்கும் அறிகுறியாயிருக்கும். இன்று, இந்த நாட்டில் தமிழும், தமிழ்க் கவியும், தமிழ் இசையும், தமிழர்களுடைய முன்னேற்றத்துக்கும், தன்மானத்துக்கும் பயன்படும்படி மக்கள் உணர, உழைக்க ஏற்ற கவிகள் செய்து மக்களை ஊக்குவிக்க அவர் ஒருவரே என் கண்ணுக்குத் தென்படுகிறார். அவரை நாம் பயன்படுத்திக் கொள்வதில்தான் நம் வெற்றியின் தன்மை இருக்கிறது. உங்கள் கழகம் வெற்றி அடையத் தளரா முயற்சி, ஒற்றுமை, கட்டுப்பாடு என்பவைகளோடு ஒழுக்கம், நாணயம் என்பவைகளும்